தோழர் வளர்மதி மருத்துவமனையில் அனுமதி!

”முக்கியமான அரசியல் ஆவணப்படம்” -ஏர் மகாராசன்

கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டிய தோழர் வளர்மதியை கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இப்போது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நேற்று மாலை 7மணி அளவில் தோழர் வளர்மதி அவர்கள் தொடர் உண்ணாவிரதத்தால் ஏற்பட்ட சர்க்கரை குறைபட்டாலும், இரத்த அழுத்தமும் குறைந்ததாலும் மயக்கமுற்றார். மயக்கமுற்ற அவரை புழல் சிறைநிர்வாகம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளது. ஆனால் இப்படியாக சிறைவாசி ஒருவரை இடமாற்றம் செய்யும் போதோ, அல்லது அவர்களக்கு சிறையில் எதுவும் நேர்ந்தாலோ அவர் சம்மந்தப்பட்ட இரண்டு நபர்களுக்கு சிறைநிர்வாகமானது சட்டப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படியான எந்தவொரு சட்டபூர்வ விசயங்களையும் சிறைநிர்வாகம் பின்பற்றவில்லை. மாறாக தோழர்கள் ஊடக நண்பர்கள் வாயிலாக தகவல் தெரிந்ததன் பெயரில் மருத்துவமணைக்கு சென்று தோழர் வளர்மதியை பார்க்கச் சென்றனர். ஆனால் சிறை நிர்வாகம் அவர்களை அனுமதி தரமறுத்த நிலையில் வழக்குறைஞர்கள் மூலம் நடத்திய நீண்ட வாக்குவாதத்தின் பின்பே அவர்களை பார்க்க அனுமதித்துள்ளது. இப்படியாக சட்டபுறம்பாக சிறை நிர்வாகம் நடந்துகொண்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் தோழரைப் பார்ப்பதற்கு புழல் சிறை நிர்வாகத்திடம் மனு செய்து அதன் பின்னேயே பார்க்க அனுமதிக்கமுடியும் என ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

#Kerala_Floods #Valarmathi_Arrest #தோழர்வளர்மதி_கைது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*