நதிகள் வீணாய்க் கடலில் கலக்கின்றன?- வரீதய்யா

ஆர்.எஸ்.எஸ் அழைப்பை ஏற்பாரா ராகுல்காந்தி?

கலைஞருக்கு புகழஞ்சலி கூட்டம்:அமித்ஷா பங்கேற்கவில்லை!

சென்னையின் பூர்வகுடிகள் யார்?

இந்தியாவின் கரைக்கடல்களில் மீன் அறுவடை பெரும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சார்டைன் எனப்படும் சாளை மீனின் அறுவடை வீழ்ச்சி ஒரு உதாரணம். கேரளாவில் 2012 இல் நான்கு இலட்சம் டன்னாக இருந்த ஆண்டு அறுவடை 2015 இல் வெறும் 46000 டன்னாகக் குறைந்தது. 2017 வரை ஒன்றே கால் டன்னுக்கு மேலே வரவில்லை. அதன் விளைவு பல முனைகளில் பிரதிபலித்தது: 3000 கோடி பொருளாதார இழப்பு, 28% மீன்வள வேலை இழப்பு, மலையாளிகளுக்கு மீனுணவுப் பற்றாக்குறை.

இந்தியர்கள் சராசரியாக ஆண்டொன்றுக்கு உட்கொள்ளும் அளவை விட மலையாளிகள் நான்கு மடங்கு அதிகம் மீன் எடுத்துக்கொள்பவர்கள். மீன் விற்கும் விலை சாதாரண மனிதர்களுக்குக் கட்டுப்படியாகவில்லை.

ஆய்வில் இறங்கினால் கேரளத்துச் சாளை மீனின் கதை தமிழ்நாட்டில் வேறொரு வடிவத்தில் பிரதிபலிக்கலாம். பருவநிலை மாற்றமும் பருவமழைப் போக்குகளும் தான் இந்த அறுவடை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்களாய்ச் சொல்லப்படுகின்றன. பருவமழை சீராக நின்று பெய்தால்தான் கடலில் உயிர்ச்சத்துக்கள் வந்து சேரும். குஞ்சு மீன்களுக்கு இரை கிடைக்கும். எல் நினோ போன்ற பருவநிலைக் கோளாறின் காரணமாக கடலாழத்திலிருந்து மேலே வரும் குளிர்ந்த நீர் குஞ்சு மீன்களைக் கொன்று விடுகின்றன. குஞ்சுகள் இல்லை, அல்லது குஞ்சுகளுக்கு இரை கிடைக்கவில்லை என்பது சாளை மீனின் அறுவடை வீழ்ச்சிக்கு முக்கியமானக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

கடல், மீன்களுக்குச் சமாதியாகிக் கொண்டிருக்கிறது. உயிர் வாழ, மீன்களுக்கு உயிர்வளி வேண்டும். லிட்டருக்கு நான்கைந்து மில்லி அளவு குறைந்தபட்சம். நம் கரைக்கடல்கள் உயிர்வளி வீழ்ச்சிப் பகுதிகளாக மாறி வருகின்றன. (2 மில்லி/லிட்டர்). சில இடங்கள் ‘மரண மண்டலங்களாக’ மாறி வருகின்றன. இந்திய முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பகுதி உள்ளிட்ட வங்காளக் கடற்பகுதியில் 65,000 ச.கி.மீ. பரப்பு அண்மையில் மரண மண்டலமாகி விட்டது. சூரை, சீலா மீன்கள் அங்கிருந்து காணாமலாகிவிட்டன.

நமக்கு மீனுணவு வேண்டும்; அது கடலிலிருந்தே வர வேண்டும். ஆனால் கடல் கல்லறையாகிக் கொண்டிருப்பதில் நமக்குக் கவலை இல்லை. பருவமழையின் சிறு பகுதி கூட கடலில் கலக்க அனுமதிக்க மாட்டோம். நதி நீர் வீணாய்க் கடலில் கலக்கிறது என்று கூக்குரலிடுவோம். எண்ணூர் கப்பல் விபத்தில் கழிவுகள் கடலில் பரவிய போது அது மீனவர்களின் பிரச்சனை என்று ஒதுங்கிக் கொண்டோம். பெருமணல் தொடங்கி எண்ணூர் வரை கரைக்கடல் கழிவுக் கிடங்காகிக் கொண்டிருக்கிறது. மீன் உற்பத்தி செய்யும் திறனை கரைக்கடல்கள் இழந்து கொண்டிருக்கின்றன. ஆழ்கடல் மீனை உற்பத்தி செய்வதில்லை. பெருந்தொழிற்சாலைகள் மாசுகளைக் கடலில் வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. கடல் மீன்வள மேலாண்மையில் அரசு தவறவிட்ட முக்கியமான கடமை இது.

தமிழகத்தில் வறட்சியும் தண்ணீர் பஞ்சமும் ஏற்படும் ஆபத்து !

“முக்கியமான அரசியல் ஆவணப்படம்” -ஏர் மகாராசன்

தோழர் வளர்மதி மருத்துவமனையில் அனுமதி!

#கடல்வளம் #நன்னீர் #கழிமுகம் #சுற்றுச்சூழல் #இயற்கைவளம் #காவிரிமேலாண்மைவாரியம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*