“நிர்மலா சீத்தாராமனுக்கு மக்கள் கஷ்டம் தெரியாது” -கர்நாடக அமைச்சர்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் சமீபத்தில் வெள்ள சேதத்தைப் பார்வையிடச் சென்ற மத்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கர்நாடக மாநில அமைச்சர் சாரா மகேஷிடமும், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவித்யா முன்னிலையிலும், மோசமாக நடந்து கொண்டதாக விமர்சனம் எழுந்தது. மத்திய அமைச்சருக்கு மாநில அமைச்சர் உத்தரவிடுவாரா என்று ஊடகங்கள் முன்னிலையிலேயே கொதித்தெழுந்தது சர்க்கைக்குள்ளான நிலையில்,
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சாரா மகேஷ்:-

ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் மத்திய அமைச்சர் மரியாதையுடனும் பொருப்புடனும் நடந்து கொண்டிருக்க வேண்டும். குடகு மாவட்டம் பெரும் பேரிடரில் சிக்கியிருகும் போது இது போன்ற விஷயங்களை ஊதி பெரிதாக்கி இருக்கக் கூடாது.ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு சமான்ய மக்களின் கஷ்டங்கள் புரியவில்லை. ஏழ்மை குறித்து அவர்களுக்கு தெரியாது.நிர்மலா சீத்தாராமன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்.பி கிடையாது. பாஜகாவால் இம்மாநிலத்தில் இருந்து நியமிக்கப்பட்ட எம்.பி எனவே அவர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று கிண்டலாக தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*