”நெருக்கடி நிலையை பிறப்பித்துள்ளது பாஜக:- மம்தா காட்டம்!

ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்!

நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி!

ரஜினியுடன் தன்னை பொருத்தமற்று ஒப்பிட வேண்டாம் : கமல்!

நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களிடையே அமோக ஆதரவு உள்ளது-மத்திய அமைச்சர்!

அசாமில் குடியுறிமை மறுக்கப்பட்டுள்ளவர்களை சந்திக்கச் சென்ற திரிணாமூல் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை அஸ்ஸாம் மாநில அதிகாரிகள் தடுத்தி நிறுத்தியமை தொடர்பாக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார் மம்தா பானர்ஜி.

அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பட்டியலில் வங்கதேசத்தில் இருந்து குடியேறி நீண்ட காலமாக இங்கு வசிக்கும் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் அசாம் மாநிலத்திற்கு தன் குழு ஒன்றை அனுப்பியது.

6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என எட்டு பேர் கொண்ட குழுவை அசாம் மாநிலத்திற்கு அனுப்ப அவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதோடு அவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கொல்கொத்தாவில் ஊடகங்களிடம் பேசிய மம்தா பானர்ஜி:-

“எங்கள் கட்சி குழுவில் இடம் பெற்றுள்ள பெண்கள் உள்ளிட்டோரை போலீசார் தாக்கியுள்ளார்கள்.சூப்பர் நெருக்கடி நிலையை பாஜக பிறப்பித்துள்ளது. அசாமில் அமைதி நிலவுவதாக பாஜக கூறுகிறது. அதை உண்மை என்றால் ஏன் எங்களை தடை செய்ய வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.

#மம்தா_பானர்ஜி #வங்கதேச_அகதிகள் #அசாம்_குடியேறிகள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*