பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்:காங்கிரஸ் அறிவிப்பு!

திருச்சியில் என்ன நடந்தது? – சமஸ் விளக்கம்!

திமுக சார்பில் நிவாரணம் :ஸ்டாலின் அறிவிப்பு!

கேரளம் வஞ்சிக்கப்படுகிறதா?

ரஃபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். இதற்கு இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலளித்தாலும் இந்த பேரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வந்தது.
இந்த விவகாரத்தில் ஆதாரபூர்வமான தகவல்களைச் சொல்லாமல் பாஜக பின்வாங்கிவரும் நிலையில் நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. ராகுல்காந்தி தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தின் பின்னர் பேசிய செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா:-
“மாநில தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மோடி ஆட்சியில் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் நடந்த முறைகேடுகள், ஊழல்கள் தொடர்பாக பேசினோம். ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கையில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. இந்த ஊழல்களை நாடு முழுக்க மக்களிடம் கொண்டு சென்று மோடி அரசை அம்பலப்படுத்தும் விதமாக ஒரு மாத காலம் நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநில மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
கேரளா மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். கேரள மாநிலத்திற்கு கூடுதல் நிதி உதவி அளிக்க வேண்டும். இது போன்ற பிரச்சனைகளில் பிரதமர் மோடி அரசியல் உள் நோக்கத்துடன் நடந்து கொள்ளக் கூடாது. நிதி உதவி வழங்குவதில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கும், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கும் இடையில் பாகுபாடு காட்டுவதை மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும். கேரள வெள்ள சேதத்திற்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும், நிதி உதவி உட்பட பல நிவாரணப்பணிகளை செய்து வருகின்றன” என்று தெரிவித்தார்.

#Ragulgandhi #Modi_sarkakr #ரஃபேல்_விமான_ஊழல்

கேரள மக்களிடம் ஆடிட்டர் குருமூர்த்தி காட்டிய வக்கிரம்!

சீமான் தாலாட்டுக் கதைகள் :கார்ட்டூன்!

நொறுங்கியது கேரளம் :324 பேர் பலி- உதவுங்கள் #KeralaFloods

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*