பிரதமர் மோடியைக் கொல்ல சதியா? வைரலாகும் #metoourbannaxal

’மேற்குதொடர்ச்சி மலை’ ஒரு விமர்சகரின் பார்வை!

மீனவர்களுக்கு தனி அமைச்சகம் :போலி வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டேன்!

அப்பல்லோவில் தயாளு அம்மாள் அனுமதி!

பாஜகவோடு கூட்டணியா? -ஸ்டாலின் பதில்!

பிரதமர் மோடியைக் கொல்ல சதி செய்தார்கள் என்ற பெயரில் நாடு முழுக்க எழுத்தாளர்களும், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டு வருவது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மராட்டிய மாநிலம் கோரேகான் – பீமா கிராமத்தில் மராத்தா – தலித் சாதியினருக்கு இடையில் மோதல் வெடித்தது.
இது தொடர்பாக மனித உரிமையாளர்கள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது போல பிரதமர் மோடியும் கொல்லப்பட வேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகள் கடிதம் எழுதியுள்ளதாகவும், அக்கடிதத்தை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, இதன் அடிப்படையில் புரட்சிகர எழுத்தாளர் வரவரராவை போலீசார் கைது செய்தனர்.ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட அவரை புனே கொண்டு சென்றுள்ளது காவல்துறை.
இது போல தெலங்கானா, மராட்டியம், அரியானா,ஜார்கண்ட், டெல்லி, கோவா, சட்டீஸ்கர் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள் அரியானாவில் இடது சாரி சிந்தனையாளரும்,வழக்கறிஞருமான பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.அது போல மும்பையில் வெர்னன் கோன்சல்வஸ், அருண் பெரேரா , சிவில் உரிமைச் செயல்பாட்டாளர் கவுதம் நவலகா ஆகியோரும் அடுத்தடுத்து பிரதமரைக் கொல்ல சதி செய்ததாக கைது செய்யப்பட்டார்கள். இக்கைதுகள் நாடு முழுக்க கடும் கண்டனங்களை உருவாக்கியிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. எழுத்தாளர் அருந்ததி ராய், பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா ஆகியோரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்கள்.
இந்த கைதுகள் பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இக்கைதுகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மராட்டிய மாநில அரசு அளித்துள்ள விளக்கத்தில்:-
“புலனாய்வு அமைப்புகள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. ஆனால், இக்கைதுகள் மனித உரிமை ஆர்வலர்களையும், சமூகப்பணியாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளதோடு, ஆண்டி சோசியல் எலிமெண்ட் என்று அரசை எதிர்ப்பவர்களை எல்லாம் அடைமொழியோடு அழைத்தது சமூக வலைத்தளங்களில் எப்படி அரசுக்கு எதிராக திரும்பியதோ அது போல இப்போது அர்பான் நக்சல் என்று சொல்லி எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களை கைது செய்திருப்பதும் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்வினையை உருவாக்கியிருக்கிறது.மத்திய அரசை கண்டித்து  #metoourbannaxal 

என்றற கேஷ்டேகில் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இடப்பட்டு வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*