புலிகளை அழிக்க வாஜ்பாய் உதவினார் – ரணில் விக்கிரமசிங்கே!

New Delhi, INDIA: Sri Lanka?s leader of the opposition Ranil Wickremesinghe (L) shakes hands with former Indian Prime Minister and Senior leader of the Bharatiya Janata Party (BJP) Atal Bihari Vajpayee during a meeting at Vajpayee's residence in New Delhi, 01 February 2007. Wickremesinghe is in India for a five-day visit. AFP PHOTO/RAVEENDRAN (Photo credit should read RAVEENDRAN/AFP/Getty Images)

திமுக இல்லாமல் திமுக பற்றி விவாதித்த புதிய தலைமுறை!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியானவருக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நீதிபதி அருணா ஜெகதீசன்!

இலங்கையின் தமிழர்கள் அடர்த்தியாக வாழும் வடபகுதி மீது போர் தொடுத்து புலிகளை அழிக்க முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் உதவினார் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய தூதரகத்திற்குச் சென்ற பிரதமர் ரணில் அங்கு வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த அஞ்சலி பதிவேட்டில் வாஜ்பாய் பற்றிய தன் நினைவுகளை குறிப்பெழுதினார்.பின்னர் வாஜ்பாய் தொடர்பான நினைவலைகளை அவர் பகிர்ந்து கொண்டார் அதில்,
“இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் சிறந்த பிரதமராக வாஜ்பாய் இருந்தார். அவர் இலங்கையின் உண்மையான நண்பனாக இருந்தார்.நான் இலங்கையின் அதிபராக இருந்த போது விடுதலைப்புலிகள் பலம் பொருந்தியவர்களாகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருந்தனர். இலங்கையின் பொருளாதாரம் உள்நாட்டு போர் காரணமாக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது.அப்போது இலங்கையின் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கவும், நீடித்த இராணுவ பயிற்சி அளிக்கவும் வாஜ்பாய் முன்னுரிமை அளித்தார். விடுதலைப்புலிகளின் கடற்புலிகளை கட்டுப்படுத்த முடிந்தற்கு வாய்பாய் அளித்த ராணுவ உதவிகளே பெரிதும் உதவியாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே.
வாஜ்பாய் இருந்திருந்தால் ஈழப் பிரச்சனையை தீர்த்திருப்பார் என்று பாஜக ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில்,முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இலங்கை அரசு ஆதரவு ஆதாரபூர்வமாக வெளி வந்திருக்கிறது.

தள்ளாடி வந்து கலைஞருக்கு கண்ணீர் அஞ்சலி செய்த விஜயகாந்த்-VIDEO!

நோட்டாவுக்கு தடை :தேசியக்கட்சிகள் நிம்மதி ஏன்?

#KeralaFloods 700 கோடி நிதி கொடுத்தது ஐக்கிய அமீரகம்!

#Vajpay #ranilvikramasinge #வாஜ்பாய்_மரணம் #ரணில்விக்கிரமசிங்கே #இலங்கை_இந்திய_உறவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*