#பெருங்கடல்வேட்டத்து பற்றி அம்பிகா குமரன்!

#பெருங்கடல்_வேட்டத்து

நேற்றுத் தேனி முற்போக்கு கலை இலக்கிய மேடை சார்பாக தோழர் அருள்எழிலன் அவர்களின் பெருங்கடல் வேட்டத்து ஆவணப்படம் திரையிடப்பட்டது

கடலை நம்பி தங்கள் வாழ்வாதாரங்களை அமைத்துக் கொண்டுள்ள மீனவ சமுதாயம் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பங்காற்றுவதாகவும் இருக்கிறது
தனிமையில் சில நிமிடங்கள் அலைகளை ரசிக்கும்போது திடீரென எழும்பும் பேரலைகள் தனிமனிதன் மனதில் பயத்தையும் பலநூறு கேள்விகளையும் எழுப்பிவிடுகிறது
ஆனால் கடல் நாடித் தங்கள் வாழ்வின் நாடிகளை
உணரும் மீனவர்கள் அலைகளைவிடவும் விவேகமும் வேகமும் நிறைந்தவர்களாக இருப்பது இயற்கையளித்த கொடை.

சமூகத்தில் தனித்தனியே சுயநலன் கருதி தனியார் நிறுவனங்களிலேயோ
சொந்தமாகவோ வேலை செய்பவர்கள்
மத்தியில் மீனவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களாகவோ தனித்தோ வேலைசெய்வதில்லை
குழுவாக இணைந்து உறவினர்கள் நண்பர்களென வரும் இலாபத்தை பகிர்ந்து கொள்ளும் ஒரு ஒற்றுமைச் சூழலில் இவர்களின் தொழில் சிறக்கிறது

இப்படி கடலோடி வாழ்வாதாரம் கொண்டுவரும் ஒவ்வொரு மீனவரும்தான் தங்கள் குடும்பத்திற்கு இரட்சகர்களாக இருக்கின்றனர். இப்படி ஆபத்தோடு உறவாடி தினமும் உயிருக்கு உத்திரவாதமில்லாத வாழ்க்கையை வாழும் மீனவர்கள் சந்திக்கும் இயற்கைப்பேரிடர் மற்றும் எல்லைப்பிரச்சினைகள் அவர்களோடு அவர்கள் குடும்பத்தையும் சேர்த்தே பாதிக்கின்றன. இதில் இயற்கைப் பேரிடர் காலங்களை அனுபவ அறிவின் மூலம் மீனவர்கள் உணரமுடியும் என்றாலும் அந்த நேரத்தில் அரசின் உதவிகளும் எச்சரிக்கை அறிவிப்புகளும்
தேவைப்படுகின்றன

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில்
ஏற்பட்ட ஒகி புயல் கன்யாகுமரி கேரள கடலோரப்பகுதிகளை சிதைத்துச் சென்றது ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலில் சிக்கி கிட்டத்தட்ட 200 பேர் எங்கே போனார்களென்றே தெரியவில்லை.. புயலைப்பற்றிய எச்சரிக்கை சரியான நேரத்தில் தரப்படவில்லை என்பதும் மீட்பு நடவடிக்கைகளின் அலட்சியமுமே
இத்தனை பேரை இழப்பதற்கு காரணம் என்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது

ஓகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களின் வலிகளையும் அரசியின் அலட்சியங்களையும் அப்பட்டமாக படம்பிடித்துக் காட்டும் ஆவணமாக பதிவுசெய்பட்டிருக்கிறது இந்தப்
#பெருங்கடல் வேட்டத்து

படம் திரையிடப்பட்ட நொடியில் எழும் அழுகுரல் மனதைப் புரட்டிப்போடும் சோகத்தை வெளிப்படுத்தி கண்ணீரை வரவழைத்துவிட்டது அடுத்தடுத்த காட்சிகளில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தகச் சார்ந்த பெண்கள்
அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாக்குமூலம் நம்மை அந்த இடத்திற்கே அழைத்துச்சென்றுவிடும்
வலிமையான உண்மைகள்

இந்த ஆவணம் மீனவ இளைஞர்களின் அறிவியல் சார்ந்த அறிவுத்திறனை படம்பிடிக்கிறது தாங்கள் சொன்ன திசையில் சென்று தேடியிருந்தால் நிச்சயம் இத்தனை பேரை இழந்திருக்க மாட்டோம் என்று கூறும் இளைஞனின் கண்கள் அறிவுப்பெட்டகமாய் மமிளிர்கின்றன

என் பிள்ளை இந்த கடலுக்குள்ள தான் இருக்கான் கல்யாணம்முடியற வயசுல இப்படி ஆயிடுச்சேனு கதறின அந்த தாய்
எங்க பசங்க வலுவானவங்க ஒருமாதம் வரைக்கும் கடலுக்குள்ள பிழைச்சிருக்கும் தெம்பு அவங்களுக்கு இருக்கு அரசு தேடல்பணிகளை தாமதிச்சதால இந்த இழப்புனு அழுது தீர்ப்பதை பார்க்கும்போது அரசின் மீது
அதிருப்தி ஏற்படுகிறது

இந்த ஒகி புயலில் சிக்கி தப்பிய ஒரு இளைஞர் கூறும்போது மூன்று நாட்கள் யாரோட உதவியும் இல்லாம தாங்களே நீந்தி கரைகண்டதாகவும் அரசுதான் கண்டுபிடிச்சாங்கனு ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிட்டதாகவும்
கூறுகிறார். இந்தக் காட்சி ஊடகத்தின் முகமூடிகளை பிய்த்து எறிவதாக இருக்கிறது சராசரி மனிதராக எத்தனை கொடிய அரசியல் சூழலில் வாழ்கிறோம் என்ற அச்சத்தைக் கொடுக்கிறது

இரண்டு பெண்குழந்தைகளோடு கணவனை பறிகொடுத்த பெண்
கணவன் இழந்த வருத்தத்தைக் கூட உணராதவளாய் வெள்ளந்தியா பேசினது ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்க வேண்டும் என்ற உணர்வைக் கொடுக்கிறது.

தேனி திரையிடலில் அம்பிகா குமரன்
தேனி திரையிடலில் அம்பிகா குமரன்

மேலும் மீனவசமுதாய மக்கள் நம்பும் பாதிரியார்களிடையே தங்களையே நம்பியிருக்கும் மக்களின் நலன்பற்றிய அக்கறை பேலோங்க வேண்டும் என்றும் இந்த ஆவணம் புரியத் தருகிறது

அழுகுரலோடு தொடங்கி அழுகுரலோடு முடியும் இந்த ஆவணப்படத்தை பார்க்கும்வரை ஒகி புயல் பாதிப்பை நானும் ஒரு செய்தியாக கடந்து வந்திருக்கிறேன் குற்ற உணர்வு
மனதைக் கொல்கிறது

அனைத்து தொழிற்துறைகளிலும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை புகுத்தி வாழும் சுயநல அரசுகள் மீனவ சமுதாயித்தினருக்கு விடுத்த எச்சரிக்கையோ என்ற அச்சம் இந்த ஆவணம் வழியே எழுகிறது

எல்லா அவலங்களையும் மறந்து கடந்து போகும் சராசரி மனிதர்களாகிய நம்மையும் இந்த ஆவணம் கன்னத்தில் அறைந்து சில உண்மைகளை எடுத்துரைக்கிறது

மொத்தத்தில் ஒகி புயலில் காணாமல் போன மீனவர்கள் நிலைமைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும மீண்டும் இதுபோல் கொடுமைகள் அரங்கேறாமல் தடுக்க ஆவண செய்ய வேண்டும்
ஆணவத்தையும் ஆட்சி அதிகாரத் திமிரையும் மறந்து பொதுமக்கள் சேவையில் முனைப்பு காட்டவேண்டும்

இந்த ஆவணப்பட உருவாக்கத்தில் பங்குபெற்ற அனைத்து தோழர்களுக்கும்.. இந்தப்படத்தை திரையிட்டு கருத்துரை வழங்க வாய்ப்பளித்த தேனி முற்போக்கு கலை இலக்கியமேடை விசாகன் அவர்களுக்கும் நன்றியும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுரையாளர் குறிப்பு:-அம்பிகா குமரன்

திருப்பூர்மாவட்டம் கொடுவாய் ஊரில் பிறந்த அம்பிகா குமரன் அடிப்படையில் தையல் கலைஞர், கவிஞர்,பாடலாசிரியர் என் பல முகம் கொண்ட இவர் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையின் திருப்பூர் மாவட்ட தலைவராகவும் இருக்கிறார்.

#ockhi_cyclone_documentary #ockhi_documentary #cyclone_documenrary #Fisherman_Documentry #மீனவர்_ஆவணப்படம் #ஓக்கி_ஆவணம் #பெருங்கடல்வேட்டத்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*