’பெருங்கடல் வேட்டத்து’ முதல் விளக்கம்!

#பெருங்கடல்_வேட்டத்து

என் ஆவணப்படம் பற்றி அது வெளிவருவதற்கு முன்பு நான் பொதுவெளியில் எதையும் எழுத வில்லை. காரணம் படம் சிக்கலின்றி வரட்டும் என அமைதியாக இருந்தேன். அதனால் இப்படி படம் நான் பண்ணுகிறேன் என்பது கூட பெரும்பாலனவர்களுக்கு தெரியாது. ஆனால், அப்படி அமைதியாக இருந்ததால்தான் என் படம் சில திரையிடல்களாவது நடந்தது. நிற்க,

நான் கட்சி சார்ந்த, அல்லது கட்சிகளின் கலாச்சார பண்பாட்டு அமைப்புகளைச் சார்ந்தவனோ அல்ல. என் படத்தை முதன் முதலாக நீரோடி கடலோர கிராமத்தில் ராஜி கையால் திரையிட முயன்றேன். கத்தோலிக்கம் மீது வைத்துள்ள விமர்சனத்தையும் சொல்லி திரையிட முடியுமா என்ற போது பலரும் ஒதுங்கி விட்டார்கள்.
தூத்தூர் செயிண்ட் ஜூட்ஸ் கல்லூரியில் திரையிடலாம் என்று என்னை அழைத்தவர்களிடம் எதையும் மறைக்க வேண்டாம் என்று கத்தோலிக்கம் மீது வைத்துள்ள விமர்சனம் தொடர்பில் சொன்னேன். பின்னர் அவர்கள் லைனுக்கே வரவில்லை.
பின்னர் சென்னையில் நண்பர் கவின் ஆண்டனி என்னை வேடியப்பனிடம் அழைத்துச் சென்று படத்தை காண்பித்தார். வேடியப்பன் படத்தைப் பார்த்து விட்டு முதன் முதலாக திரையிட்டார். ரஷ்யன் கலாச்சார மையத்தில். அந்த திரையிடலுக்குப் பின்னர் ரஷ்ய கலாச்சார மையத்தில் சென்சார் சான்றிதழும் போலீஸ் அனுமதியும் கேட்கிறார்கள். இனி அரசியல் படங்களுக்கு இது தேவையாம்.
#
மறு நாள் கவிக்கோ அரங்க திரையிடலை காவல்துறை ரத்து செய்தது. என்னை அழைத்த காவல்துறையினர் படம் எங்களுக்கு காட்டுங்காள் என்றார்கள். கவிக்கோ அரங்கத்தினர் போன் பண்ணி போலீசிடம் போய் அனுமதி பெற்று வாருங்கள் என்றார்கள். நான் இரண்டையுமே மறுத்தேன். படம் எடுப்பது மட்டும்தான் என் வேலை போலீசிற்கு பொட்டுக் காட்டுவது என் வேலை அல்ல என்றேன். இப்போது.காம் பீர் முகம்மது, நண்பர்கள் ஆசீஃப், தமிழ் எல்லோரும் போய் காவல் அதிகாரிகளுடன் பேசி திரையிடலுக்கு அனுமதி பெற்றார்கள். படத்தை அவர்களுக்கு நாங்கள் காட்டவில்லை. நான் காவல்நிலையம் செல்லவும் இல்லை.
#
உடுமலை திரையிடல் தொழில் நுட்ப காரணங்களால் தடைபட்டது. அதற்கு நண்பர் சர்வணன் எனக்கு டிக்கெட் எல்லாம் போட்டுக் கொடுத்தார். சரவணனை எனக்கு அறிமுகம் செய்தவர் ஜெயராணி. அவரும் இந்த திரையிடலின் போது அறிமுகமானவர்தான்.
#
புதுச்சேரியில் மாலதி மைத்ரி உள்ளிட்ட நண்பர்களின் திரையிடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
#
நாகர்கோவிலில் இலைகள் அமைப்பினர் என் படத்தை திரையிட்டதற்காக விசாரிக்கப்பட்டார்கள். ஜீவா, தங்க கிருஷ்ணன், கிருஷ்ணகோபல் இவர்களின் தங்க கிருஷ்ணனை மட்டுமே நான் அறிவேன், ஏனையோர் இந்த திரையிடலுக்குப் பின்னர் எனக்கு நண்பர்கள் ஆனவர்கள்.
#
தேனியில் விசாகன் தோழர். இப்படி ஒரு அபூர்வமான மனிதர் இருக்கிறார் என்பதே எனக்கு இந்த திரையிடலுக்குப் பின்னர்தான் தெரியும் கலை இலக்கிய மேடை சார்பில் தேனியில் திரையிட்டார். திரையிடல் முடிந்து சென்னை திரும்பிய பின்னர் முகநூலில் அவருக்கு நட்புக் கோரிக்கை விடுத்தேன். ஏற்றுக் கொண்டார்.
#
மொத்தத்தில் ஐந்தே ஐந்து திரையிடல்கள்தான் நடந்திருக்கிறது. என் படம் முதன் முதாலாக திரையிட்டு அவர்களாகவே முன் வந்து திரையிட்டார்கள். இப்போது தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த பல தோழர்கள் திரையிடலுக்கு அனுமதி கேட்டு என்னை தொடர்புகொள்கிறார்கள். என் படம் பற்றி முதன் முதலாக தீக்கதிரில் எழுதிய பகத் சிங்கும் இந்த திரையிடலுக்கு பின்னர் எனக்கு அறிமுகம் ஆனவர்தான்.

#

ஐந்தே ஐந்து திரையிடல்களில் சிறியதும், பெரியதுமாக எழுதப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பதிவுகள் பாராட்டுக்கள் விமர்சனங்கள் அனைத்துமே இந்த படத்தை திரையிட்ட பின்னர் எனக்கு கிடைத்தவை. என் படத்திற்கு முன்னர் சிறு சலனம் கூட இல்லாது இருந்தேன். இப்போதும் அப்படியே.இன்னும் இது பற்றி எழுத ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது அதையும் பொது வெளியில் பகிர்வேன், தமிழ் சூழலில் இருக்கும் குழு மனபோவம் உடைய வேண்டும். கட்சிகள், கோட்பாடுகள், கடந்து படைப்புகள் பாரபட்சமற்று பார்க்கப்பட வேண்டும் என்பதே என் நோக்கம்.

#

என் ஆவணப்படத்தின் மூலம் எனக்கு கிடைக்கும் இந்த ஆதரவு மட்டுமே உண்மையானது. மற்றபடி அருடதந்தைகள், மறைமாவட்டம், திருச்சபை, கோவில் பூனைகள், மணியாட்டுகிறவர்கள் இவர்களின் உதவியோ படைபலமோ எனக்கு அவசியம் இல்லை. காரணம் இவர்களால் பாதிக்கப்பட்டு இவர்களை மீறி வெளியில் வந்தவன் நான்.

இப்போதைக்கு இது போதும்…பதிவுகள் தொடரும்….

#பெருங்கடல்வேட்டத்து

1 Comment

  1. பெருங்கடல் வேட்டத்து படம் ஆரம்ப காட்சியே ஆர்பரிக்கும் கடல் சலனமின்றி கிடப்பது போல …

    இனி ஆர்பரித்தே ஆகவேண்டும் எழுத்தில்.

Leave a Reply

Your email address will not be published.


*