பொது சிவில் சட்டத்திற்கு முஸ்லீம் வாரியம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது!

சோனியாவை சிக்க வைக்க சிபிஐ நடத்திய பேரம் அம்பலம்!

தன் வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய இந்து மக்கள் கட்சி பிரமுகர்!

கலைஞர் சிகிச்சை : வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் திமுக:புதிய படம் வெளியீடு!

இந்தியாவில் பல்வேறு மொழி, மதங்களைப் பின்பற்றும் மக்கள் தனித் தனி நம்பிக்கைகளோடும், பண்பாட்டு வழக்கங்களோடும் வாழ்கிறார்கள். இவர்களின் இந்த வாழ்க்கையை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக அனைவருக்கும் பொதுவான சட்டம் என்று கூறி பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதை நோக்கமாகவும் தங்கள் இலகாகவும் கொண்டுள்ளது. பொது சிவில் சட்டம் அறிமுகம் ஆனால் பின் தங்கிய மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் வழங்கபப்டும் சலுகைகள் உரிமைகள் பறிப்போகும் நில்லையில், பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்டு வருகிறது.
இந்நிலையில் சட்ட ஆணையத்தின் தலைவர் பி.எஸ்.சவுகானை முஸ்லீம் வாரிய குழுவினர் நேற்று சந்தித்துப் பேசினார்கள். அப்போது முஸ்லீம் தனிச் சட்டத்தில் மேற்கொல்ளப்படும் , அல்லது தலையிடும் எந்த ஒரு முடிவையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஆணையத் தலைவரிடம் தெரிவித்தோம் என்றார்கள். இதற்கு பதிலளித்த ஆணையத் தலைவர் “அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பொது சிவில் சட்டம் வர வாய்ப்பில்லை” என்றார். “பத்து ஆண்டுகளுக்கு அல்ல அதை எப்போதுமே கொண்டு வர வேண்டாம். அப்படி கொண்டு வந்தாலும் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்து விட்டதாக முஸ்லீம் வாரிய துணைத்தலைவர் சையது ஜலாலுதின் உம்ரி தெரிவித்தார்.

#முஸ்லீம்சட்டவாரியம் #இந்து_முஸ்லீம்_ஒற்றுமை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*