மினிமம் பேலன்ஸ் : ஏழைகளிடமிருந்து கோடிகளை அபேஸ் செய்த வங்கிகள்!

”ஆண்கள் ஆணையம் வேண்டும்”-பாஜக எம்.பி கோரிக்கை!

நவீன இந்தியா :ஆடையில் நவீனம் சிந்தனையில் பழமை!

வீட்டில் பிரசவம் பார்த்தால் நடவடிக்கை பாயும் :ஓபிஎஸ் எச்சரிக்கை

பொதுத்துறை வங்கிகளில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய்களை திருடி விட்டு கார்ப்பரேட் முதலாளிகள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், உள்ளூர் ஏழைகள் வங்கிகளில் வைத்திருக்கும் கணக்கில் குறைபட்ச இருப்புத் தொகையை முறையாக பராமரிக்காத காரணத்தைக் காட்டி பல கோடி ரூபாயை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் சட்டத்தின் பெயரால் கொள்ளையடித்துள்ளன.
தற்போது வெளியிட்டுள்ள வங்கிகளின் புள்ளிவிபரப்படி 2017-2018 ஆம் ஆண்டில் சுமார் 4,989.55 கோடி ரூபாய் அளவுக்கு அபராதமாக வசூலித்துள்ளார்கள். இப்படி வசூலித்ததிலேயே எஸ்.பி.ஐ வங்கிதான் மிக அதிகமான அபராத தொகையை வசூலித்துள்ளது. தனது வாடிக்கையாளர்களிடமிருந்து ரூபாய் 2,433.87 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளது. தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கி ரூபாய் 590.84 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளது.
குறைந்த பட்ச இருப்புத் தொகையை பின்பற்ற முடியாதவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருந்தாலும் இந்த வங்கிகள் இவர்களிடம் கருணைகாட்டுவதில்லை. ஆனால் இதே வங்கிகள் பெரும் தொழில் அதிபர்களுக்கு கடன் உத்திரவாதம் எதுவும் இல்லாமல் பல்லாயிரம் கோடிகளை அள்ளிக்கொடுத்து விட்டு பின்னர் அவர்களும் நாட்டை விட்டு வெளியேறி ஏதாவது வெளிநாடுகளில் குடியிரிமை பெற்று உல்லாசமாக வாழ்கிறார்கள்.

#பொதுத்துறை_வங்கிகள் #மினிமம்_பேலன்ஸ்

2 கோடிக்கு மிக்சர் சாப்பிட்ட ரகுபதி ஆணையம் : கலைக்க நீதிமன்றம் உத்தரவு!

திமுகவை வீழ்த்த ஸ்லீப்பர் செல்கள்?

சுகப்பிரசவம் ஹீலர் பாஸ்கர் போலீஸ் வளையத்தில்: இவர்கள் எதை பணமாக்குகிறார்கள்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*