மீனவர்களுக்கு தனி அமைச்சகம் :போலி வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டேன்!

பாஜகவோடு கூட்டணியா? -ஸ்டாலின் பதில்!

நதிகள் வீணாய்க் கடலில் கலக்கின்றன?- வரீதய்யா

ஆர்.எஸ்.எஸ் அழைப்பை ஏற்பாரா ராகுல்காந்தி?

கேரளாவில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டு நாள் பயணமாக கேரளா வந்தார். ஆலப்புழாவில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் அளித்ததோடு நிவாரணங்களையும் வழங்கினார்.பின்னர் மீட்புப் பணியில் ஈடுபட்டு மக்களை மீட்ட மீனவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட ராகுல்காந்தி மீனவர்களைப் பாராட்டி பேசும் போது:-

“பேரிடரில் சிக்கிய மக்களை மீட்ட மீனவர்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன். அவர்களை பாராட்டுகிறேன். ஓகி புயல் பாதிப்பின் போது பெருமளவு கேரள மீனவர்கள் பாதிக்கப்பட்டார்கள். எனினும் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு இப்போது ஏற்பட்ட மழை வெள்ளச்சேதத்தில் சிக்குண்ட மக்களை மீட்டார்கள். விவசாயிகளைப் போல மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மீனவர்களும் பாதுகாப்பற்றவர்களாக உள்ளார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று நான் போலியான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன். இதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்களிடம் தெரிவிக்கிறேன்” என்றார்.

#Kerala_Floods #Rgul_in_kerala #கேரளாவில்_ராகுல்காந்தி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*