மெரில் ஸ்ட்ரீப்,ஜான் கெசல்: ப்ரியங்களுடனான பொழுது!

கருணாநிதியின் தியாகம் அளப்பரியது :நிதின் கட்கரி புகழாரம்!

ஸ்மாட் நகரம் அமைச்சர் வேலுமணியின் பினாமிக்கு டெண்டர்!

தமிழ்த்தேசிய அரசியல் உக்கிரமாக காத்துக் கிடக்கிறது:ராஜ்தேவ்

‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு

மெரில் ஸ்ட்ரீப் & ஜான் கெசேல் இதில், ஜான் கேசேல், அப்போதே மிக பிரபலமான நடிகர். மெரில் ஸ்ட்ரீப் அவரை ந்யூ யார்க்கில் நடந்த ஆடிஷன் ஒன்றில் சந்திக்கிறார் கெசேல், மெரில் ஸ்ட்ரீப்பை விட பதினான்கு வயது மூத்தவர்.கெசெலிடம் இருந்து தான் நடிப்பை அதிகம் கற்று கொண்டதாக அல் பசினோ கூறியிருக்கிறார்.மெரில் ஸ்ட்ரீப்பும், கெசெலும் இணைந்து பணியாற்ற தொடங்குகிறார்கள் இரண்டொரு சந்திப்புகளில் காதல்.‘செட்’டில் உள்ள அத்தனை பேரும் வெட்கும் அளவுக்கு காதல். 1977 ஆம் ஆண்டு, கெசேலுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இருவரும் இணைந்து ‘டீர் ஹண்டர்’ எனும் படத்தில் நடிக்க தொடங்குகிறார்கள். அது தான் கெசெலினுடைய கடைசி படம். இவ்வேளையில் தான் இருவரும் மேலும் நெருக்கம் ஆகிறார்கள். மெரில் ஸ்ட்ரீப்புக்கு , கெசெலுடன் இருந்து அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. ஆனால், மருத்துவ பில்கள் அதை அனுமதிக்கவில்லை. மருத்துவ செலவுகளை சமாளிக்க கிடைத்த படங்களில் எல்லாம் வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் வெளிநாட்டில் படப்பிடிப்பு. மரித்து கொண்டிருக்கும் தன் காதலனை பிரிந்து இரண்டரை மாதங்கள் இருக்க வேண்டும். “எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது, ஜானுக்கு உடம்பு முடியவில்லை, எனக்கு அவனோடு இருக்க வேண்டும்” என்று தவித்துக் கொண்டிருந்தார்.
குறிப்பிட்ட படத்தின் கடைசி காட்சியை எதிர்பார்த்திருந்து சந்தோஷமாக முடித்து, ந்யூ யார்க் வருகிறார்.வரும் போது, கெசெல், மேலும் தளர்ந்து, நோயுற்று இருந்தார். அடுத்த ஐந்து மாதங்களுக்கு கெசெலும், ஸ்ட்ரீப்பும் மாயமானர்கள்.படமோ, காட்சியோ, படப்பிடிப்போ இல்லை. கெசெல் மட்டும் தான். 1978 மார்ச் 12, கெசெல் இறந்தார். செப்டம்பர் மாதம், மெரில் ஸ்ட்ரீப் டான் கம்மரை திருமணம் செய்து கொண்டார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*