மெர்சலை மிஞ்சும் விஜய்யின் சர்கார்!

தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்!Video

ஸ்மாட் நகரம் அமைச்சர் வேலுமணியின் பினாமிக்கு டெண்டர்

தமிழ்த்தேசிய அரசியல் உக்கிரமாக காத்துக் கிடக்கிறது:ராஜ்தேவ்

‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் மெர்சல். வழக்கமான விஜய் படமாக ஓடி முடிந்திருக்க வேண்டிய மெர்சல் படத்தை இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை பாஜகவைச் சேரும். ஒருவகையில் விஜய்க்கு இந்தியா முழுக்க கிடைத்த ஆதரவு மெர்சலை தூக்கி நிறுத்திய நிலையில் விஜய் – ஏ-ஆர்- முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் சர்கார் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
கீர்த்திசுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடத்திருக்கும் இப்படத்தில் வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு, என பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மெர்சல் அரசியல் படம் அல்ல., அரசியல் பேசும் படம் , ஆனால், சர்கார் படம் முழுக்க முழுக்க அரசியல் பேசும் படம். தமிழகமே அரசியல் கொதி நிலையில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் சர்கார் படம் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களால் நேரடியாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.குறிப்பாக நீட் தேர்வுக்கு பலியான அனிதா, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் பலியானது. எட்டுவழிச்சாலை என தமிழகம் சந்திக்கும் பிரதான பிரச்சனைகளில் அரசை விமர்சித்து அப்ளாஸ் அள்ள இருக்கிறார் விஜய். இந்த ஆண்டு தீபாவளிக்கு வரவிருக்கும் சர்க்கார் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உருவாகியிருக்கும் நிலையில், படத்தை எதிர்ப்பவர்களை எப்படி எதிர்கொள்வது என்றும் ஆலோசித்து வைத்திருக்கிறார் விஜய்.

 

#சர்கார் #விஜய்யின்_சர்கார் #Sarkar #ilaiyathalapathy_vijay_sarkar #mersal

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*