மோடியை தழுவியதை என் கட்சியினரே விரும்பவில்லை -ராகுல்காந்தி!

குல்தீப் நய்யார் -1923-1918 வாழ்வும்-மரணமும்!

கேரளம் நாசா வெளியிட்ட அதிர்ச்சி ஆய்வு!

தமிழகத்தில் பாம்பு மாத்திரை போதையை பரப்பும் வட மாநில கும்பல்!

பிரதமர் மோடியை ஆரத்தழுவியதை என் கட்சியினரும் விரும்பவில்லை. மோடியும் விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆளும் பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடியால் தன் கண்களைப் பார்த்து நேருக்கு நேராக பேச முடியாது என்றார். மேலும் அவர் மீது நான் வெறுப்பாக இல்லை என்று கூறி விட்டு இருக்கையின் அருகில் சென்று ஆரத்தழுவினார். மோடியும் ராகுலுக்கு கை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளான இந்த நிகழ்வு பற்றி ராகுல் இப்போது பேசியிருக்கிறார்.
ஜெர்மனி நாட்டிற்குச் சென்றுள்ள ராகுல் ஹம்பர்க் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் உரையாடினார் “உங்களை வெறுப்பவர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான் காந்திய சிந்தனை. வன்முறைக்கு வன்முறை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.எனவேதான் வெறுப்பான கருத்துக்களை பிரதமர் மோடி தெரிவித்த போது அவருக்கு பதிலுக்கு அன்பை தெரிவிக்க முற்பட்டேன். என் மீது பலரும் அன்பு பாராட்டுகிறார்கள். அவர்களை ஆரத்தழுவி என் அன்பை வெளிப்படுத்துகிறேன். அவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.ஆனால் நாடாளுமன்றத்தில் நான் கட்டித்தழுவியதை பிரதமர் மோடி விரும்பவில்லை. ஆனாலும் வெறுப்பை போக்கும் என் எண்ணம் வென்றுள்ளது. அன்பினால் மட்டுமே வெறுப்பை மாற்ற முடியும் என்பதில் மகாத்மா உறுதியாக இருந்தார். என் செயலால் என் கட்சியினர் சிலரும் ஆச்சரியமடைந்தனர். பிரதமரை நான் கட்டித்தழுவியதை அவர்கள் ஏற்கவில்லை. நான் அப்படி செய்திருக்கக் கூடாது என்று என்னிடம் தெரிவித்தார்கள்.ஆனால், அந்தக் கருத்தை நான் ஏற்கவில்லை. அன்பை விதைப்பதன் மூலம் வெறுப்பை களைய முடியும். என்பால் மட்டுமே வன்முறைகளை தீர்க்க முடியும்” என்றார் ராகுல்காந்தி.

 

#Ragul_Hugs_Modi #Ragul_Primeministermodi #மோடியை_ஆரத்தழுவியராகுல்

#சமூகநீதி :கமிஷன் – கலெக்‌ஷன் ஸ்டாலின் எச்சரிக்கை!

வாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் அஞ்சலி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*