ராஜாஜி-காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுத்தாரா கருணாநிதி உண்மை என்ன?

நாளை புதுச்சேரியில் ‘பெருங்கடல் வேட்டத்து’ திரையிடல்!

இறுதி ஊர்வலம் தொடங்கிவிட்டது-மனுஷ்ய புத்திரன்!

#kalaignar_karunanidhi_Updates தொலைதூரத்திலிருந்து ஒரு கடிதம்!

ஆதவன் மறைவதில்லை!

திமுக தலைவர் கருணாநிதி மீதும் திராவிடக் கொள்கைகள் மீதும் பகையுணர்வுடன் செயல்படும் சிலர் தொடர்ந்து கருணாநிதியின் மீது வன்மம் கக்கி வருகிறார்கள். பெரும்பாலும் வதந்திகள் அடிப்படையில் கருணாநிதி மீது கொட்டப்படும் வதந்திகள் எள்ளளவும் கருணாநிதியை பாதிக்கவில்லை என்பது நேற்று நடந்த இறுதிச் சடங்கில் லட்சோப லட்சம் தொண்டர்களும் பொது மக்களும் கலந்து கொண்ட நிகழ்வுகளே சாட்சி என்னும் நிலையில், கடந்த சில நாட்களாக மூதறிஞர் ராஜாஜிக்கும், பெருந்தலைவர் காமராஜரும் மறைந்த போது இருவரையும் மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதி மறுத்ததாக தவறான தகவலை இணையதளங்களில் கசிய விட்டுள்ளார்கள் சிலர். இது தொடர்பாக ஆதாரபூர்வமான சில தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது.

இந்த செய்திகளை பரப்புவதில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுத்த ஆளும் கட்சியினரின் பங்கும் உண்டு என்னும் நிலையில், இதே வாதங்களை நீதிமன்றத்திலும் அதிமுக அரசு வைத்ததுதான் வேடிக்கை காரணம் அது பொய்யான தகவல்.

காங்கிரஸ் தலைவர் ராஜகோபாலாச்சாரி எனப்படும் ராஜாஜி 1972-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார். அது போல முன்னாள் முதல்வர் காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இயற்கை எய்தினார்.இவர்கள் இருவருக்கும் கருணாநிதி மெரினாவில் இடம் மறுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில்,

ராஜாஜிக்கு இடம்

ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில்:-
“ராஜாஜிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க கருணாநிதி மறுத்ததாக வெளியான தகவல் தவறானது. ராஜாஜி தன் உடலை எரியூட்ட விரும்பினார். அவர் விருப்பப்படியே உடல் அடக்கம் செய்யப்படாமல் எரிக்கப்பட்டது. முதலில் அவருக்கு நினைவில்லமே இல்லை. கிண்டியில் ரஜாஜிக்கு நினைவில்லம் அமைத்ததே கருணாநிதிதான். அரசியலில் ராஜாஜியும் கருணாநிதியும் மாறுபட்ட கொள்கைகளோடு இருந்தாலும், இருவருக்குமிடையில் நெருங்கிய நட்பு இருந்தது” என்று நினைவுகூர்கிறார்.

காமராஜர் அடக்கம் உண்மை என்ன?

காமராஜன் விவகாரத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்று அப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் பழ.நெடுமாறன், ஜெயகாந்தன், கண்ணதாசன் ஆகியோர் காமராஜர் மறைந்த போது மெரினாவில் இடம் கேட்டதாகவும் அதற்கு கருணாநிதி மறுத்ததாகவும் செய்தி வெளியிட்டது. இதற்கு கருணாநிதி மறுத்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
காமராஜருடன் நெருங்கிப் பழகியவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான பழ.நெடுமாறன் இது பற்றி வெளியிட்டுள்ள தகவலில்:-
“ காமராஜர் இறந்ததும் அவரது உடலை காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அடக்கம் செய்ய முடிவு செய்தோம். காமராஜரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை. காமராஜர் மறைந்த போது கருணாநிதி முதல்வராக இருந்தார். அவர் எங்களிடம் காமராஜர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் ஆகவே அவருக்கான இறுதிச் சடங்குகளை காந்தி மண்டபத்தில் வைத்து நடத்துங்கள் என்றதோடு காமராஜருக்கு நினைவில்லம் அமைக்க இடம் ஒதுக்கித் தந்தவரும் கருணாநிதிதான். இப்போதுள்ள தலைமுறையினர் வாட்ஸ்சப், பேஸ்புக்கில் வரும் பொய்யான தகவல்களை உண்மை என நம்பி பகிர்ந்து வருகிறார்கள்.உண்மைகளை கண்டறிவதில்லை” என்று பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் பேசுகிறவர்களும் இப்படி பகிரப்படும் தகவல்களின் உண்மை தன்மை என்ன என்பதை யோசிக்காமல் சகட்டு மேனிக்கு பகிர்கிறவர்களும் இது பற்றி யோசிக்க வேண்டும்.

#கருணாநிதி_மரணம் #karunanidhi_passed#Karunanidhi_dead  #கலைஞர்_கருணாநிதி #Kauvery_Hospital#Karunanidhi_in_kauvery_Hospital #tamil_news#Tn_politics #தமிழ்_செய்திகள் #தமிழகச்செய்திகள்#அண்ணா_சமாதி#Anna_square

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*