வறுமை :விவசாயின் குடும்பமே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்!

கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு காவிரி மருத்துவமனை அறிக்கை!

”ஆண்கள் ஆணையம் வேண்டும்”-பாஜக எம்.பி கோரிக்கை!

நவீன இந்தியா :ஆடையில் நவீனம் சிந்தனையில் பழமை!

வீட்டில் பிரசவம் பார்த்தால் நடவடிக்கை பாயும் :ஓபிஎஸ் எச்சரிக்கை

குண்டடம் வண்ணாம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துச்சாமி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 11 வயதில் ராஜலட்சுமி என்ற மகளும், 4 வயதில் மாணிக்க சத்திய மூர்த்தி என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் முத்துச்சாமி தனது குடும்பத்தினருடன் தாராபுரம் அருகே உள்ள கெத்தல்ரேவ் என்ற கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கின்றனர். அங்கேயே குடிசை வீடு போட்டு விவசாயத்தை பார்த்து வந்திருக்கின்றனர்.உதவிக்காக தனது தந்தை வேலுச்சாமி மற்றும் தாயர் மயிலாத்தாள் ஆகியோரையும் உடன் வைத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் பொய்த்து போகவே, அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்திருக்கிறார்.மீண்டும் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயத்தில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.இதையடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக முத்துச்சாமியின் மனைவி செல்வி திருப்பூர் அருகே உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர்.இந்நிலையில் வங்கி மற்றும் தனி நபர்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை தொடர்ந்து நீடித்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் மிகுந்த மனஉலைச்சலில் முத்துச்சாமி இருந்து வந்திருக்கிறார்.இதன் காரணமாக தனது குடும்பத்திற்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.சில மாதங்களுக்கு முன்பு கடன்காரர்கள் வந்து கடனை கேட்டு நெருக்கும் போது அவமானம் தாங்க முடியாமல், முத்துச்சாமியின் மனைவி செல்வி தனது பெற்றோர் வசிக்கும் ரங்கபாளையம் கிராமத்திற்கு சென்றிருக்கிறார்.

இதையடுத்து முத்துச்சாமி தனது தாய், தந்தை மற்றும் குழந்தைகளுடன் கெத்தல்ரேவ் என்ற கிராமத்திலேயே வசித்து வந்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் நெருக்கடி தாங்க முடியாத நிலையில் குடும்பத்தினருடன் ஊரை விட்டு வெளியேறி விடலாம் என பேசியிருக்கின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு வயதின் காரணமாக நடமாட முடியாத தந்தை வேலுச்சாமியை மட்டும் விட்டு விட்டு, அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த தனது மகள் ராஜலட்சுமி, மகன் மாணிக்க சத்தியமூர்த்தி ஆகியோரை முத்துச்சாமி வீட்டிற்குள்ளே தூக்கிட்டுள்ளார்.இதன் பின்னர் தனது தாய் மயிலாத்தாளுடன் தானும் வீட்டிற்கு வெளியில் இருந்த வேப்பமரத்தில் ஏணியை போட்டு ஏறி, அதில் தூக்கு கயிற்றை மாட்டி அதிலிருந்து குதித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.5/8/18 அதிகாலையில் முத்துச்சாமியின் தந்தை வேலுச்சாமி எழுந்து பார்த்த போது தனது மனைவி, மகன், பேரன், பேத்தி ஆகியோர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அழுது ஊரை கூட்டியிருக்கிறார்.இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் பிரேதங்களை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது.

#வறுமை #குடும்ப_வறுமை #விவசாயிகள்_தற்கொலை #வறுமை_காரணமாக_தற்கொலை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*