விஜயகாந்த் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

திருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ்!

கலைஞர் கருணாநிதி:தலைவர்கள் உரை!

மெர்சலை மிஞ்சும் விஜய்யின் சர்கார்!

தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்!Video

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த். கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அங்கு பேசுவதற்காக பயிற்சிகளும், சிகிச்சைகளும், சில பரிசோதனைகளும் நடந்த நிலையில், மீண்டும் சிகிச்சைக்காக வரச் சொல்லியிருந்தார்கள். கலைஞர் கருணாநிதி மரணத்தின் பின்னர் நாடு திரும்பிய விஜயகாந்த் நேரடியாக கருணாநிதியின் சமாதிக்குச் சென்று கதறி அழுதது காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது. தன் பிறந்த நாள் அன்று தொண்டர்களையும், முக்கிய பிரமுகர்களையும் சந்தித்த விஜயகாந்திற்கு நடிகர் பார்த்திபர் மெழுகு போன்ற பரிசொன்றை அளித்தார். இந்நிலையில், ஓய்வில் இருந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை மியாட் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சையளித்து வருகிறார்கள்.
மனைவி பிரேமலதாவும், அவருடைய தம்பி சுதீஷும் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை தொடர்பாக மியாட் மருத்துவமனை இன்னும் எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.

#Vijayakanth_Hospitalised #அவசர_சிகிச்சையில்_விஜயகாந்த்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*