வீட்டில் பிரசவம் பார்த்தால் நடவடிக்கை பாயும் :ஓபிஎஸ் எச்சரிக்கை

2 கோடிக்கு மிக்சர் சாப்பிட்ட ரகுபதி ஆணையம் : கலைக்க நீதிமன்றம் உத்தரவு!

திமுகவை வீழ்த்த ஸ்லீப்பர் செல்கள்?

சுகப்பிரசவம் ஹீலர் பாஸ்கர் போலீஸ் வளையத்தில்: இவர்கள் எதை பணமாக்குகிறார்கள்?

வீடுகளில் சுகப்பிரசவம் பார்ப்பது தவறு. அப்படி ஈடுபடுகிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
திருப்பூரில் கிருத்திகா என்ற பெண் வீட்டில் வைத்து பார்த்த பிரசவத்தின் போது உயிரிழந்தார். இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சுகப்பிரசவம் பார்க்கும் பயிற்சி வகுப்பிற்கு அழைப்பு விடுத்த ஹீலர் பாஸ்கரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இபோது தேனி அருகில் உள்ள கோடாங்கிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தன் மனைவி மகாலட்சுமிக்கு வீட்டில் வைத்து சுகப்பிரசவம் பார்த்துள்ளார். தொப்புள் கொடி சரியாக அறுபடாத நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதோடு மகாலட்சுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.
வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது தொடர்பான சர்க்கை சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
“அரசு மருத்துவமனைகளில் விதிகளின் படிதான் பிரசவம் பார்க்க வேண்டும்.விதிகளை மீறி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறு. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

#சுகப்பிரசவம் #மருந்தில்லா_மருத்துவம் #வீட்டில்_பிரசவம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*