
திமுகவை வீழ்த்த ஸ்லீப்பர் செல்கள்?
சுகப்பிரசவம் ஹீலர் பாஸ்கர் போலீஸ் வளையத்தில்: இவர்கள் எதை பணமாக்குகிறார்கள்?
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாகவே அரசு ஒரு பிரச்சனையை ஆறப்போட வேண்டுமென்றால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து விடும். அவர்களுக்கென்று தனி அலுவலங்கள், மாளிகைகள் ஒதுக்கப்படும், அவர்களும் அரசு செலவில் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டே விசாரிப்பார்கள் விசாரிப்பாளர்கள் விசாரித்துக் கொண்டே இருப்பார்கள்.
இந்நிலையில்தான்,முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த புதிய தலைமைச் செயலகத்தை அரசு பல் நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றியதோடு. புதிய தலைமைச் செயலக கட்டுமானப்பணிகளில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி அதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார். பின்னர் இந்த விசாரணை ஆணையத்திற்கு தடை கோரி திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்த வழக்கில் இந்த ஆணையத்திற்கு நீதிமன்றம் செயல்படவில்லை.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படாத இந்த ஆணையத்திற்கான செலவுகள் வழங்கப்பட்டுள்ள வசதிகள் , இதுவரை அமைக்கப்பட்ட ஆணையங்கள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றம் கேட்டது.
தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஒரு ஆணையமும், ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக ராஜேஸ்வரன் தலைமையில் ஒரு ஆணையமும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகச்சாமி ஆணையமும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் , இந்த ஆணையங்களுக்கு அரசு செலவிடும் தொகை, வசதிகள் உள்ளிட்ட விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதில் சிங்காரவேலு ஆணையத்திற்கு 2 கோடியே 6 லட்சம் ரூபாயும், ராஜேஸ்வரன் ஆணையத்திற்கு ஒரு கோடியே 47 லட்சமும், ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு 32 லட்சம் ரூபாயும் அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு 27 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அரசு. நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு செயல்படாத ஆணையமாக இருந்த ரகுபதி ஆணையத்திற்கு மட்டும் 4 கோடியே 11 லட்ச ருபாய் செலவு செய்துள்ளது. இந்த ஆணையம் செயல்படாமல் இருந்த ஆண்டில் மட்டும் இரண்டு கோடி ரூபாய் செலவு செய்துள்ளது அரசு.
இந்த ஆணையம் இன்று விசாரணைக்கு வந்த போது செயல்படாத ஆணையத்திற்கு 2 கோடி செலவு செய்தது வீண் செலவும். ஆகவே அங்குள்ள ஆவணங்களை அரசிடம் ஒப்படைத்து விட்டு இடத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் முறைகேடுகள் நடந்திருந்தால் வழக்குப் பதியுமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் விசாரணை ஆணையங்கள் அரசு அலுவலங்களையே தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
#சிங்காரவேலு_ஆணையம் #ரகுபதி_ஆணையம் #விசாரணை_ஆணையங்கள்
Be the first to comment