#kalaignar_karunanidhi_Updates தொலைதூரத்திலிருந்து ஒரு கடிதம்!

ஆதவன் மறைவதில்லை!

கலைஞர் கருணாநிதியின் கல்லறை வாசகம் இது!

நேற்றும் இன்றும் கலைஞரை நினைத்துக்கொள்கிறேன் என்று தலைப்பிட்டு நான் எழுதிய பதிவுகளைப் படித்துவிட்டு இப்படி எழுதியவர் அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் ”ப்யூனிக்ஸ் ” நகரில் வசிக்கும் ஒரு தோழி. அவரிடம் இன்னும் எழுத நிறைய இருக்கிறது என்றவுடன், அவருக்கு அவரது பள்ளிப்படிப்புக்காலத்தில் -1998 இல்- கலைஞர் எழுதிய கடிதத்தை அனுப்பிவைத்தார்.

அந்தக் கடிதத்தின் பின்னணியைச் சொல்லுங்கள் என்றேன். அதற்கு அவர் எழுதிய கடிதம்.

நான் கல்லூரி மாணவியாக இருந்த போது முதல்வரான கலைஞருக்கு மறைமலை நகர் சாலை வசதி தொடர்பாக நீண்ட கடிதம் எழுதினேன். அவர் படிக்க மாட்டார் என்ற எண்ணத்தில் கொஞ்சம் கடுமையாக விமர்சனம் செய்து விட்டேன். 2 நாட்களுக்குள் அமைச்சர் பொன்முடி என் வீட்டிற்கு வந்து விட்டார். கலைஞர் எனது கடிதத்தை எல்லா அமைச்சர்களுக்கும் fax செய்ததாகக் கூறினார். பழுதான சாலைகள் சரிசெய்யப்படும் என்றும் கூறினார். கலைஞரும் எனக்கு பதில் கடிதம் எழுதி கூட நான் அவரிடம் கேட்டிருந்தபடி அவரது கையொப்பமிட்ட புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார் hand courier மூலமாக. அதன்பிறகு நான் அவரது அரசின் செயல்பாடுகள் மற்றும் திமுக வின் நிலைப்பாடுகள் குறித்து எழுதிய கடிதங்களுக்கு பதில் கடிதம் எனது வீட்டருகே இருந்த secretariat ஊழியர்கள் மூலம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அதில் ஒன்று தான் அக்கடிதம். பின் திரு சண்முகநாதன் அவர்கள் என்னை அழைத்து சந்திக்க நேரம் கொடுத்தார். தந்தையுடன் சென்று கலைஞரை சந்தித்தேன். மக்களாட்சியின் தத்துவத்தை அவர் முழுமையாக கடைப்பிடித்தார். அவரது ஆகச் சிறந்த குணம் அதுவே!!!!!

தகவல் -அ.ராமசாமி

#கருணாநிதி_மரணம் #karunanidhi_passed #Karunanidhi_dead#கலைஞர்_மு_கருணாநிதி #Kauvery_Hospital#Karunanidhi_in_kauvery_Hospital #tamil_news #Tn_politics #தமிழ்_செய்திகள் #தமிழகச்செய்திகள் #அண்ணா_சமாதி#Anna_square

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*