#KeralaFloods அரிசிக்கு கொடுத்த 233 கோடியை திரும்ப வசூலிக்கும் மத்திய அரசு!

அழகிரியின் நோக்கம்தான் என்ன?

திமுக இல்லாமல் திமுக பற்றி விவாதித்த புதிய தலைமுறை!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியானவருக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நீதிபதி அருணா ஜெகதீசன்!

புலிகளை அழிக்க வாஜ்பாய் உதவினார் – ரணில் விக்கிரமசிங்கே!

கேரள மழை வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிய அரசுக்கு பதிலாக கேரள அரசு 233 கோடி ருபாயை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கேரள மக்கள் மழை வெள்ள சேதங்களின் நேரடி பாதிப்பில் இருந்து இப்போதுதான் மீண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலனவர்கள் இன்னும் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. காரண்ம மழை வெள்ளம் வீடுகளை மணலால் மூடி விட்டது. பல இடங்களில் மின்சாரம் இல்லை, இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல கேரள மக்கள் திரும்பி வரும் நிலையில், கேரள மாநில அரசு 2500 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டது. ஆனால் மத்திய அரசு வெறும் 600 கோடி ரூபாயை மட்டுமெ வழங்கியுள்ளது.

மேலும் எரிபொருள், சிலிண்டர்கள். அரிசியும் வழங்கியது. ரயிலில் நிவாரணப்பொருட்கள் கொண்டு செல்ல கட்டணம் இல்லை என்றும் மத்திய அரசு அறிவித்தது. இப்போது அவசர கால நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு பதிலாக 233 கோடி ரூபாயை மத்திய அரசு கேரள அரசிடம் திரும்பக் கேட்டுள்ளது. இந்த பணத்தை கேரளம் திரும்பக் கொடுக்கா விட்டால், மத்திய அரசு நிவாரணமாக அறிவித்துள்ள 600 கோடியில் 233 கோடியை கழித்து விட்டு மீதி பணத்தை மட்டும்தான் கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு கொடுக்கும். இதே போல கேரளாவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்காக சேவைக்கட்டத்தையும் மத்திய அரசு வசூலிக்க இருப்பதாக  செய்திகள் வெளியாகி உள்ளது.

காஷ்மீர் மாநிலம் வெள்ள சேதத்திற்கு உள்ளான போது 1200 கோடி ரூபாய் நிதியை அறிவித்த மத்திய அரசு பின்னர் இராணுவ சேவைக்கட்டணமாக 500 கோடி ரூபாயை  அந்த நிவாரணத் தொகையில் கழித்து விட்டுத்தான் கொடுத்தது.

இந்தியா மாநிலங்களில் ஏற்படும் பேரிடர்களில் ஈடுபடுத்தப்படும் இராணுவத்திற்கு மாநில அரசுகளிடம் இருந்தே சேவைக்கட்டணம் வசூலிக்கும் முறை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை மதுரையில் இருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக கொண்டு வர தனி விமானத்தை மத்திய இராணுவத்துறை அனுப்பி வைத்தது. இதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.

கேரள அரசு கேட்ட நிதியையும் கொடுக்காத நிலையில் அமீகரம் கொடுக்க முன் வந்த தொகையையும் ஏற்க தயக்கம் காட்டுவதாக மத்திய அரசு மீது விமர்சனம் எழுந்திருக்கும் நிலையில், இப்போது  நிதி உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் கேரள மாநிலத்திற்கு கொடுத்த நிதியையும் பிடுங்கி விடுவார்களோ என்ற அச்சம் கேரளத்தில் எழுந்துள்ளது.

#KeralaFloods #கேரளவெள்ளச்சேதம் #கேரளாவுக்கு_நிதி_உதவி #இராணுவ_கட்டணச்சேவை

“சென்னை தினம்” – கலைஞரை நினைவூட்டும் அடையாளம்!

#KeralaFloods 700 கோடி நிதி கொடுத்தது ஐக்கிய அமீரகம்!

திமுக இல்லாமல் திமுக பற்றி விவாதித்த புதிய தலைமுறை!

அழகிரியின் நோக்கம்தான் என்ன?

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியானவருக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நீதிபதி அருணா ஜெகதீசன்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*