#Trailer நாளை நாகர்கோவிலில் திரையிடப்படுகிறது ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம்!

#சமூகநீதி :கமிஷன் – கலெக்‌ஷன் ஸ்டாலின் எச்சரிக்கை!

வாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் அஞ்சலி!

2017-ஆம் ஆண்டு நவம்பர் 28-29 தேதிகளில் வீசிய ஓக்கி புயலின் போது மீனவர்களை மீட்பதில் அரசு காட்டிய அலட்சியம் 194 மீனவர்கள் கடலில் மடிந்து போக காரணமானது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து பத்திரிகையாளர் அருள் எழிலன் இயக்கியுள்ள ஒரு மணி நேர ஆவணப்படம் தமிழகத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. முகநூலில், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் இந்த ஆவணப்படத்தை பாராட்டி பலரும் எழுதும் நிலையில், இந்த ஆவணப்படம் நாகர்கோவில் அருகே உள்ள முகிலன் விளையில் திரையிடப்படுகிறது.
விபரம்,

ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்த எனது ஆவணப்படம், “இலைகள் இலக்கிய இயக்கம்” சார்பில் நாகர்கோயில் முகிலன் விளையில் வருகிற வெள்ளி மாலை ஆறு மணிக்குத் திரையிடப்படுகிறது.

இடம் – பாரதி வித்யா மந்திர்,

முகிலன் விளை,நாகர்கோயில் நாள் – 24-08 -2018 ,வெள்ளி கிழமை ,

மாலை ஆறு மணி

( முகிலன் விளைக்கு நாகர்கோயிலில் இருந்து ,மேல கிருஷ்ணன் புதூர் வழியாகச் செல்லும் 36 பள்ளம், 36 B மணக்குடி மற்றும் மேலகிருஷ்ணன் புதூர் செல்லக் கூடிய மினி பஸ்கள் அனைத்திலும் வந்து சேரலாம்.நாகர்கோயிலில் இருந்து அரை மணி பயண நேரம் )

அனைவரும் வருக!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*