அக்காவுக்கு கோபம் வருமளவுக்கு அப்படி என்னதான் சொன்னார் சோஃபியா!

இளைஞர்களுக்காக பெண்களைக் கடத்தும் பாஜக எம்.எல்.ஏ?

எழுவர் விடுதலை தமிழக அரசு முடிவெடுக்கலாம்!

நாகர்கோவில் கொலைகார தனியார் பள்ளிகள்!

ஸ்டெர்லைட் பற்றி மார்ச் மாதம் சோஃபியா எழுதிய கட்டுரை!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை புகாரின் பேரின் கைது செய்யப்பட்ட சோஃபியாவுக்கு ஜாமீன் கிடைத்து அவரும் வெளியில் வந்து விட்டார். ஆனால், விமான நிலைய வளாகத்தினுள் சோஃபியா தமிழிசைக்கு எதிராக உண்மையில் கோஷம் எழுப்பினரா அல்லது தமிழிசைக்கு கோபம் வரும் அளவுக்கு விமானத்திற்குள் வைத்து வேறு ஏதேனும் கமெண்ட் அடித்தாரா சோஃபியா என்ற கேள்விகள் பல தளங்களில் எழுப்பட்டு வருகிறது.
முற்போக்கு எண்ணம் கொண்ட தூத்துக்குடி சோஃபியா ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கவனம் கொண்டுள்ளார். இது தொடர்பாக ஆங்கிலம் தமிழில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளும் வெளியாகி உள்ள நிலையில், கனடா படிக்கச் சென்ற சோஃபியா விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்ப சென்னை வந்திருக்கிறார். சென்னை வந்தவரை பெற்றோர்கள் சென்று விமானத்தில் தூத்துக்குடி அழைத்து வந்திருக்கிறார்கள். இண்டிகோ விமானத்தில் தமிழிசைக்கு பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சோஃபியாவின் அருகில் அவரது தயார் இருந்திருக்கிறார்.
தமிழிசையைப் பார்த்ததும் டுவிட்டரில் அதை பதிவிடுகிறார். “பாசிச பாஜக ஒழிக” என்று கத்த வேண்டும் போலிருக்கிறது என்று பதிவு செய்கிறார். அந்த அளவுக்கு ஸ்டெர்லைட் படுகொலைகள் அவரை பாதித்திருக்கிறது. அது தமிழக மக்களின் கூட்டு மனச்சாட்சியின் குரல். என்றாலும், விமானத்திற்குள் என்ன நடந்தது என்பது பற்றி சோஃபியா இதுவரை பதிவு செய்யவில்லை.
தமிழிசை சொல்லும் கோணம் மட்டுமே ஊடகங்களில் பதிவாகி இருக்கிறது. இது தொடர்பாக புதிய தகவல்கள் இப்போது கசிந்திருக்கிறது. விமானத்தினுள் தன் தயாருடன் பேசிக் கொண்டிருந்த சோஃபியா தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைகள், நீட் அனிதா மரணம், உள்ளிட்ட வெவ்வேறு பிரச்சனைகளில் பாஜக நிலைப்பாடு பற்றி பேசிக் கொண்டே வந்திருக்கிறார். பாஜகவே அனைத்திற்கும் காரணம் என்று பேசிக் கொண்டிருக்க டென்சனான தமிழிசை பின் இருக்கை பயணியான சோஃபியாவை அதட்ட.. கூலான சோஃபியா “சும்மா மிரட்ற வேலை எல்லாம் வைச்சுக்காதீங்க,சும்மா ……ட்டு உக்காருங்க” என்று சொன்னாராம்.
இதைக் கேட்ட தமிழிசைக்கு ஆத்திரம் பொங்க கைபிசைந்தபடி அமர்ந்திருக்கிறார். தூத்துக்குடியில் தன் ஆதரவாளர்களைக் கண்டதும் தாம் தூம் என குதிக்க அவரை வரவேற்க வந்தவர்கள். சோஃபியாவை அச்சுறுத்தும் நோக்கில் அசிங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.
ஆனால், இது எதைக் கண்டும் அஞ்சாத சோஃபியாவிடம் காவல்துறை “மன்னிப்புக் கேட்டுங்க உங்களை விட்டு விடுவாங்க” என்று கட்டப்பஞ்சாயத்து பண்ண. சோஃபியாவோ “நான் தவறாக எதுவும் பேசவில்லை. நாட்டில் உள்ள நிலமைகள் குறித்து பேசினேன்.அதனால் மன்னிப்பு கேட்க முடியாது” என்றிருக்கிறார்.
சோஃபியாவின் பிடிவாதத்தை சற்றும் எதிர்பார்க்காத தமிழிசை டென்ஷனின் உச்சத்திற்குச் சென்று போனை எடுத்து யாரிடமோ பேசி விட்டு கிளம்பி விட்டார். அதன் பின்னர்தான் சோஃபியா கைது செய்யப்பட்டார்.
சோஃபியா சொன்ன “பாசிச பாஜக ஒழிக” என்ற கோஷம் இந்தியா முழுக்க வைரலாகியது.
சோஃபியா சொன்ன அந்த இன்னொரு வார்த்தைதான் தமிழிசையை டென்ஷன் ஆக்கியது!

#Tamilisai_Soundararajan #DrTamilisaiBJP #தமிழிசை_சௌந்தரராஜன் #தமிழக_பாஜக #மோடி_அரசின்_வீழ்ச்சி#yougogirlsofia#isupportsofia #JusticeForSofia #பாசிசபாஜக_ஆட்சிஒழிக

தோழர் ஓவியா தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்!

தெறிக்க விட்ட ஷோபியா: பாஜக பணிந்தது எப்படி?

சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

சோபியாவுக்கு பெருகும் ஆதரவு :டிரெண்டிங் ஆகும் பாஜக ஒழிக

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*