அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜிநாமா?

#செம்மரக் கொலைகள்: தமிழர் ஒருவர் ஆந்திராவில் சுட்டுக்கொலை!

ரஃபேல் விமான ஊழல்: மோடிக்கு உருவாகும் சர்வதேச நெருக்கடி!

திருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ்!

தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்!Video

ரெய்ட், ஊழல் புகார் உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கி தப்பி வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மீது 20 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்ற வழக்கில் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வருமானவரித்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
வருமானவரித்துறை ரெய்டில் அமைச்சர் விஜயபாஸ்கர்ன் வீட்டில் பல்வேறு ஆவணங்களும் பணமும் கிடைத்தது. ஆர்.கே.நகரில் வழங்க இருந்த பணம். உள்ளிட்ட பல ஆவணங்கள் கிடைத்தது. அவரது வருவாய் தொடர்பாக ஆய்வு செய்த வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சிகரமான பல தகவல்கள் கிடைத்தது. குவாரித் தொழிலில் ஈடுபடும் அமைச்சர் விஜயபாஸ்கர் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு மலைகளைக் குடைந்து மலைகளை அழித்திருக்கிறார். மேலும் அவரது தந்தை சின்னதம்பியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த அதிகாரிகள். அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை கட்டுக்கட்டாக கைப்பற்றினார்கள். இப்போது ஆதாரபூர்வமாக நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு  நெருக்கடி உருவாகி இருக்கிறது. அமைச்சர் விஜயபாஸ்கர். தன் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற நெருக்கடி எழுந்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்திலாவது நடவடிக்கை இருக்குமா அல்லது இதுவும் அரசியல் பேரங்களுக்கு பயன்படுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஸ்மாட் நகரம் அமைச்சர் வேலுமணியின் பினாமிக்கு டெண்டர்

தமிழ்த்தேசிய அரசியல் உக்கிரமாக காத்துக் கிடக்கிறது:ராஜ்தேவ்

‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு

#அமைச்சர்_விஜயபாஸ்கர் #வருமானவரித்துறை_ரெய்ட் #

#செம்மரக்கொலைகள் #செம்மரக்கடத்தல் #semmaram

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*