“அமைதிக்கான பெண்களின் பயணம்!

எழுவர் விடுதலை : ஜனாதிபதி பெயரில் போலி அறிவிப்பு வெளியிட்ட உள்துறை அமைச்சகம்!

திமுகவை குறிவைக்கும் ஊடகங்கள்?

மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார் அற்புதம்மாள்!

”20 நிமிடங்கள் வரை மல்லையா அருண்ஜெட்லியுடன் பேசினார்”- காங் குற்றச்சாட்டு

அமைதிக்கான பயணம் என்ற பெயரில் இந்தியா முழுவதிலும் உள்ள பெண்கள் குமரி முதல் திருப்பதி வரையில்  பயணம் ஒன்றை நடத்துகிறார்கள். இது தொடர்பான பதிவு!

ஏன் நடத்துகிறோம்?

திட்டமிட்ட முறையில் நம் மீது ஏவப்படும் வன்முறையையும் வெறுப்புணர்வையும் தோற்கடிக்க, இந்தியா முழுவதும் ஐந்து முனைகளில் இருந்து 2018 செப்டம்பர் 22 துவங்கி அக்டோபர் 13 வரை பெண்கள் தலைமையில் இந்தப் பரப்புரைப் பயண இயக்கம் நடைபெற இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டப்படியும், ஜனநாயகப்படியும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை மீட்பதும், அன்பையும் அமைதியையும் வன்முறையற்ற சமூகத்தையும் முன் நிறுத்துவதும் இந்தப் பரப்புரைப் பயணத்தின் நோக்கம்.

செப்டம்பர் 22 ஆம் தேதி, தமிழகத்தில், பெண்கள் தலைமையில் குமரியில் பரப்புரைப் பயணம் தொடங்குகிறது. திருநெல்வேலி, விருதுநகர், திருமங்கலம், மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், திருமயம், புதுக்கோட்டை, பேராவூரணி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம், தாம்பரம், வழியாக செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னை வந்தடையும். சென்னையில் ஒரு பெரிய அரங்கக் கூட்ட நிகழ்வுக்குப் பிறகு, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வேலூர் , குடியாத்தம், வழியாக ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, சத்தீஸ்கர் வழியாக டெல்லி நோக்கிப் பயணிக்க உள்ளோம்.

அக்டோபர் 13 ஆம் தேதி பெண்களின் மாபெரும் ஒன்று கூடல் டெல்லியில் நடக்க உள்ளது. அதிகார மையத்தின் அருகிலேயே அரசியலமைப்பு சட்டப்படி இந்தியா பயணிக்க வேண்டிய அவசியத்தை முழக்கமிட இருக்கிறோம்.

இந்தப் பிரச்சாரத்தின் நோக்கத்தில் பற்றுறுதி கொண்ட தனிநபர்கள், தோழமை இயக்கங்கள் எங்களுடன் இணைத்து, பாசிச, மதவாத, பிற்போக்கு சக்திகளை வீழ்த்த வேண்டும். இதை நாம் ஒவ்வொருவரும் நமது அடிப்படைக் கடமை என்றே கருத வேண்டும். அப்போதுதான் நமது உரிமைகள் மீட்டெடுக்கப்படும். சமத்துவம் சாத்தியம்.

#அமைதிக்கான_உரையாடல்
#baateinamankitn
#baateinamanki
#allindiawomensrally
#peaceanddemocracy

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*