அழகிரி கருணாநிதியின் விருப்பத்திற்குரிய மகனா?

“நான் தலைவர் கருணாநிதியின் மகன் சொன்னதைச் செய்வேன் ”என்று கூறியிருக்கிறார் அழகிரி. செப்டர்ம்பர் 5-ஆம் தேதி கருணாநிதி சமாதி நோக்கி பேரணி செல்ல இருக்கும் அழகிரியின் வார்த்தைகள் இவை.
ஆனால், அழகிரி கருணாநிதியின் மகன்தான் ஆனால் கருணாநிதி விரும்பிய மகன் அல்ல காரணம் மகன்களை விட குடும்பத்தை விட கட்சியை தன் ஆன்மாவாக, ரத்தமும் சதையுமாக நினைத்து தன் மரணம் வரை வாழ்ந்தவர் கருணாநிதி.
வழக்கமாக அரசியல் கட்சிகளை விட்டு தலைவர்களை நீக்கினால் நீதி கேட்டு அவர்கள் போராடுவார்கள். ஆனால், கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கோரி நீதி கேட்டு குரல் கொடுத்து வருகிறார் அழகிரி.

2014-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியால் திமுகவை விட்டு நீக்கப்பட்டார் அழகிரி. அதன் பின்னர் அவர் சேர்த்துக் கொள்ளவே இல்லை. இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி கருணாநிதி மறைந்த பின்னர் திமுக தலைவராக ஸ்டாலின் பொருப்பேற்றுக் கொண்டார். அழகிரியோ தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தனிக்கட்சி துவங்க ஆலோசனை நடத்தினார். ஆனால் சுற்றி நின்றவர்களைப் பார்த்து அவரே அதிர்ச்சிக்குள்ளாகி அப்செட் ஆனார்.
தன்னுடன் கலந்த காலங்களில் கலந்து பழகியவர்களை தொடர்பு கொள்ள முயன்றால். அழகிரியால் கூட அவர்களிடம் பேச முடியவில்லை. அவர் தொடர்பு கொள்ள முயல்கிறார் என்றால் கூட தெறித்து ஓடி விடுகிறார்கள் திமுக தலைவர்கள். இந்நிலையில், செப்டம்பர் 5-ஆம் தேதி கலைஞர் நினைவிடத்திற்கு ஊர்லவமாகச் செல்ல கடந்த 7 நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார்.இதற்கும் போதுமான ரெஸ்பான்ஸ் இல்லாத நிலையில், முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி:-
“திமுகவில் எங்களை சேர்த்துக் கொண்டால். கட்சியின் வெற்றிக்கு இணைந்து பாடுபடுவோம். அது போல ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளோம்.திமுகவில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்’ என்றார். நெளிந்தும் குழைந்தும் கோபத்துடன் அழகிரி வைக்கும் கோரிக்கை ஒன்றுதான் திமுகவில் இணைய வேண்டும் என்பது.

அழகிரியை திமுகவை விட்டு நீக்கியது அவரது தந்தை கருணாநிதி. நான் கருணாநிதியின் மகன் என்று எந்த அழகிரி சொல்கிறாரோ அதே அழகிரியை கருணாநிதி “அழகிரி என் மகனே இல்லை” என்றும்  கூறியிருக்கிறார். அப்படி ஒரு மகனைப்பார்த்துச் சொல்ல சொத்துப் பிரச்சனைகளோ வேறு காரணங்களோ இல்லை.

திமுகவின் தென் மண்டல பொறுப்பாளராக இருந்து கொண்டு கருணாநிதியின் எதிரிகள் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டு கருணாநிதிக்கும் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இப்போதும் , எப்போதும் அழகிரி கருணாநிதியின் மகன் தான் ஆனால், கருணாநிதி விரும்பும் மகன் அல்ல, கருணாநிதியின் ப்ரியத்திற்குரிய மகனாக ஸ்டாலின் தான் இருந்தார். காரணம் கருணாநிதியைப் போல கட்சியை சுமக்கும் அர்ப்பணிப்பு ஸ்டாலினிடம் இருந்தது. அழகிரியிடம் கட்சியை உடைக்கும் வேகம்தான் உள்ளது. இதை கருணாநிதியே விரும்ப மாட்டாரே?

#DMK #MKAlagiri #MKStalin #திமுக_தலைவர்_ஸ்டாலின் #Dmkleader_staline

மெர்சலை மிஞ்சும் விஜய்யின் சர்கார்!

தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்!Video

‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு

கருணாநிதியின் தியாகம் அளப்பரியது :நிதின் கட்கரி புகழாரம்!

ஸ்மாட் நகரம் அமைச்சர் வேலுமணியின் பினாமிக்கு டெண்டர்!

தமிழ்த்தேசிய அரசியல் உக்கிரமாக காத்துக் கிடக்கிறது:ராஜ்தேவ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*