“உண்மையோ பொய்யோ எதையாவது வைரலாக்குங்கள்” -பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அமித்ஷா!

கலைஞர் புகழஞ்சலியில் மருத்துவர்கள்: ‘ஜெ’வுக்கு சிச்சையளித்த மருத்துவர்கள் விசாரணை வளையத்தில்!

ஆதார் அட்டை அரசு சேவைக்கு கட்டாயம்:தனியாருக்கு தடை-உச்சநீதிமன்றம்!

கருணாஸ் சட்டமன்ற பதவியை பறிக்க ஒபிஎஸ்- இபிஎஸ் திட்டம்!

உண்மையோ பொய்யோ நாம் விரும்பும் செய்திகளை வைராக்கி பரப்புங்கள் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ராஜஸ்தான் மாநில பாஜக நிர்வாகிகளிடையே பேசினார்.சமூக வலைத்தளங்களின் ஒரு அங்கமாக விளங்கும் பேஸ்புக், ட்விட்டர், வாட்சப் போன்றவைகளில் அன்றாடம் கொட்டப்படும் செய்திகளில் பெரும்பாலானவை போலியானவை. வட இந்திய மாநிலங்களில் நடைபெற்ற பல கலவரங்களுக்கு அடிப்படையாக இருந்தது வாட்சப்மூலம் பரவும் வதந்திகள்தான். இந்த வதந்திகளை சில கட்சிகளும் மதவாதிகளும் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்தி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா “உண்மையோ பொய்யோ நாம் நினைக்கும் செய்தியை பகிரலாம். சுமார் 32 லட்சம் பேர் நம் வாடஸப் குரூப்களில் உள்ளனர். இதனால் எதையும் வைரலாக்கும் சக்தி நமக்கு இருக்கிறது.சமீபத்ஹ்டில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தன் தந்தை முலயாம் சிங் யாதவை அடித்து விட்டதாக வாட்ஸப்பில் புரளி பரவியது. உண்மையில் அப்படி நடக்கவில்லை என்றாலும் அது வைரலாகியது. நம்மிடம் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் தகுதியும் திறமையும் உள்ளது.அதனால், உண்மைத் தன்மை பற்றி கவலைப்படாமல் செய்திகளை வைரலாக்க வேண்டும்”என்றார்.
அமித்ஷாவின் இந்த பேச்சும் கடும் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. ஒரு கட்சியின் தலைவரே தொண்டர்களிடம் பொய்ச்செய்திகளை பரப்பி விடுங்கள் என்று பேசியிருப்பது தொடர்பாக கண்டனங்கள் பதிவாகி இருக்கும் நிலையில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:-
”நாட்டின் ஆளும் கட்சி தலைவர் பொய்களை பரப்ப தன் தொண்டர்களை தூண்டி விடுகிறார்.அரசின் மீதுள்ள பல்வேறு பிரச்சனைகளை மறைக்க இப்படி பொய்களை பரப்ப பாஜக முயல்கிறது.இடைத்தேர்தல் தோல்வி போல அனைத்து தேர்தல்களிலும் பாஜக தோற்கும்”என்றார் அவர்.
பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் பங்கேற்ற அத்தனை கலவரங்களிலும் வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியும் ஒரு காரணமாக இருப்பதை நாம் காண முடியும். இம்மாதிரி கலவரங்களில் ஈடுபடுகிறவர்கள் பின்னாட்களில் பாஜகவில் எம்.பி. எம்.எல்.ஏ ஆகியும் விடுகிறார்கள். இந்த சூழலில்தான் பாஜக தலைவர் அமித்ஷா உண்மையை தன்மை பற்றி கவலைப்படாமல் செய்திகளை பரப்புங்கள் என்று கூறியிருக்கிறார்.

#வாடஸப்_வதந்திகள் #வதந்திகள் #அமித்ஷா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*