உ.பி காட்டுமிராண்டித்தனம் :ஆப்பிள் நிறுவன அதிகாரி சுட்டுக்கொலை!

சபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலம் தழுவிய பந்த்!

திருமுருகன் உயிருக்கு ஆபத்து?

‘பரியேறும் பெருமாள் ‘ குறைவான காட்சிகள்தான்-மக்களிடம் பெருகும் ஆதரவு!

உத்தரபிரதேச மாநிலத்தில் காரை நிறுத்தாமல் சென்ற காரணத்திற்காக ஆப்பிள் நிறுவன அதிகாரியை போலீசார் சுட்டுக் கொன்றனர். இது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இவர் ஆட்சிப்பொருப்பேற்ற பின்னர்  காதலர்கள், மாட்டிறைச்சி உண்போர், சிறுபான்மையினர் உள்ளிட்ட பல சக்திகளும் தாக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் என்கவுண்டரில் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். சில என்கவுண்டர்கள் ஊடகங்களை அழைத்துச் சென்றே நடத்தப்பட்டன என்றும் செய்திகள் வெளியானது.  இதனால் போலீஸ் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உத்தரபிதேச மாநிலத்தில் லக்னோவைச் சேர்ந்தவர் விவேக் திவாரி, இவர் லக்னோவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றுகிறார். நேற்று நடந்த ஆப்பிள் எக்ஸ் போன்  அறிமுக விழாவில் கலந்து கொண்ட விவேக் திவாரி நள்ளிரவில்  விழா முடிந்து தன் நண்பர் சனாகானுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது கோம்தி நகர் எக்ஸ்டன்சனில் சென்ற போது போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திவாரியின் காரை நிறுத்திய போது அவர் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை  போலீஸ் ஜீப்பில் துரத்திச் சென்று திவாரியின் காரை மடக்கி அப்படியே அவரை காருக்குள்ளேயே சுட்டு வீழ்த்தியிருக்கிறது உ.பி போலீஸ்.

இதுவரை நடந்த பல என்கவுண்டர்கள் கேள்விக்குள்ளாக்கப்படாமல் கடந்து சென்ற நிலையில் இப்போது சுட்டுக் கொல்லப்பட்டவர் பெரிய மனிதர் மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அது இந்தியா முழுக்க அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. திவாரியைக் கொன்றதாக இரண்டு போலீசார் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 

பரியேறும் பெருமாள்’ கூட்டு மனசாட்சி மீது வீசப்பட்ட முதல் கல்!

தனிமைச்சிறையில் திருமுருகன் :பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்!

மெகுல் சோக்‌ஷி இந்தியா கொண்டு வரப்படுவாரா?

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*