எங்கள் பிரதமர் திருடர் வைரலான #Mera_PM_Chor_Hai

ஊழல் மூட்டை எடப்பாடி பழனிசாமி :ஸ்டாலின் காட்டம்!

கருணாஸுக்கு ஒரு நீதி எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா? -ஸ்டாலின் கண்டனம்!

எச்.ராஜாவை விட்டு விட்டு கருணாஸை கைது செய்த போலீஸ்!

பிரதமர் நரேந்திர மோடி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து எங்கள் பிரதமர் திருடர் என்ற #Mera_PM_Chor_Hai என்ற ஹேஷ் டேக் வைராகி பாஜகவுக்கு பெரும் தலைகுனியை ஏற்படுத்தியது.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் இப்போதைய இந்திய பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவுக்கும் இடையில் நடந்ததால் அந்நாட்டு ஊடகங்கள் இது தொடர்பான பல செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட நிலையில், அது பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவுக்கு நெருக்கடியாக மாற அவர் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அந்த பேட்டியில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இருந்து இந்துஸ்தான் எரோநாட்டிக்கல் என்ஜியரிங் நிறுவனத்தை விலக்கி விட்டு பிரதமர் மோடியின் நண்பரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது தொடர்பாகவும் பேசிய ஹாலண்டே “இந்த விவகாரத்தில் உள்நாட்டு நிறுவனம் ஒன்றும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தப்படி ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை இணைத்துக் கொள்ளுமாறு இந்திய அரசு பரிந்துரைத்தது. வேறு சாய்ஸ் எதுவும் கொடுக்கப்படவில்லை”என்று கூறியதோடு பிரதமர் மோடியை நேர்மையற்றவர் என்றும் ஹாலண்டே விமர்சித்திருந்தார்.
ஹாலண்டேயின் இந்த நேர்காணல் கடும் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், ராகுல்காந்தி இந்த நேர்காணலை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியை திருடர் என்று விமர்சித்தார். அது வலைத்தளங்கள் முழுக்க எதிரொலிக்க பிரதமர் திருடர் என்ற ஹேஷ்டேக் வைரலாகி பாஜகவை பாடாய் படுத்துகிறது.ராகுல் காந்தியின் இந்த அதிரடி பாஜக அமைச்சர்களை பதட்டத்திற்கு உள்ளாக்கியிருக்கும் நிலையில், மத்திய இராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இது தொடர்பாக,
“ராகுலின் மொத்த குடும்பமும் திருடர்கள்தான். ஊழலில் திளைத்தவர்கள். நேரு காலத்தில் ஜீப் ஊழல், இந்திரா காலத்தில் தேர்தல் முறைகேடு, ராஜீவ் காலத்தில் போர்பர்ஸ் விமான ஊழல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஏராளமான ஊழல்”என பட்டியலிட்டுள்ளார் சீத்தாராமன்.

காற்றாலை மின்சார ஊழல் :ஆதாரம் வெளியிட்டார் ஸ்டாலின்!

சட்டீஸ்கரில் காங்கிரஸை கைவிட்டு அஜித் ஜோகியுடன் இணைந்தார் மாயாவதி!

போலீஸ் டவுசரை கழட்டி விடுவேன் :கருணாஸ் சவால்!

தேசபக்தர்களுக்காக அமேசானில் வருகிறது கோமியப் பொருட்கள்!

#Rafale_deal #ரஃபேல்_போர்விமான_கொள்முதல் #இந்தியாவில்_முதல்_பெரிய_ஊழல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*