எச்.ராஜாவை மீது நடவடிக்கையாவது மயிராவது?

“ஹைக்கோர்ட்டாவது மயிராவது” -போலீசை விளாசிய எச்.ராஜா -Video!

விநாயகர் ஊர்வலம்:சிறுவர்களுக்கு கல்வீச கற்றுக்கொடுக்கும் மத வெறியர்கள்Vido

தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் பாஜக பிரமுகர்களை தமிழக அரசால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதே யதார்த்தம். மோடி அரசின் பொம்மைகளாக ஆட்டு விக்கப்படும் அதிமுக அரசு எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிந்தாலும் அவர் நிழலைக் கூட நெருங்க முடியாது என்பதே உண்மை யதார்த்தம்.
முன்னதாக பாஜக பிரமுகரும் நாடக நடிகருமான எஸ்.வி.சேகர் ஊடகப் பெண்களை இழிவு படுத்தி பேசிய போதும், இதே எச்.ராஜா பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்ற போதும் இவர்கள் இருவர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக இவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்து பாதுகாத்தது. எந்த போலீஸ் இவர்களை பாதுகாத்ததோ அதே போலீசை இன்று இழிவுபடுத்தி பேசியிருக்கிறார் எச்.ராஜா.
விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக போலீசை எச்சரித்த எச்.ராஜா உயர்நீதிமன்றமாவது மயிராவது என்று சொன்னது நீதிமன்றத்தையும், நீதிபதிகளாக இருப்பவர்களையும் இழிவு படுத்துவதாகும். ஆனால், தமிழகத்தில் பலவீனமான மைனாரிட்டி அரசு ஒன்று எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் நீதிமன்ற வழக்குகள் தாமதிப்பதால் தொடரும் நிலையில், இந்த பலவீனமான அரசால் இது போன்றவர்களை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால்தான் எச்.ராஜா போன்றவர்கள் எல்லை மீறி பேசுகிறார்கள்.
தூத்துக்குடி விமானத்தில் வைத்து ஒரு மாணவி தமிழிசையை நோக்கி பாஜக ஒழிக என்று கோஷம் எழுப்பியதற்காக கைது செய்யப்பட்டார். வாட்சப்பில், முகநூலில் பாஜகவுக்கு எதிராக முக்கினால் கூட வழக்கும் கைதும் பாய்கிறது. ஆனால், போலீசின் நெஞ்சுக்கு நேர கையை நீட்டி பேசும் தைரியமும், உயர்நீதிமன்றத்தை மயிரோடு ஒப்பிட்டு வசமும் இவர்கள் மீது தமிழக அரசால் நடவடிக்கை எடுக்க முடியாது அந்த திராணியோ தெம்போ தமிழக அரசுக்கு இல்லை என்பதே யதார்த்தம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*