எதிர்க்கட்சிகள் பந்த்; தமிழகத்தில் தோல்வியடைந்தது!

எழுவர் விடுதலை:காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு!

வைக்கம் விஜயலட்சுமிக்கு டும்…டும்..டும்!

The Nun விமர்சனம் – பிரபு தர்மராஜ்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நேற்று (10-09-2018) அன்று எதிர்க்கட்சிகள் அறிவித்த பந்த் தமிழகத்தில் தோல்வியைத் தழுவியது. பேருந்துகள், ஆட்டோக்கள், வழக்கமாக ஓடின.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். ஆனாலும், நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நேற்று முழு நாள் அடைப்பிற்கு அழைப்பு விடுத்தன. நாடு முழுவதும் 21 கட்சிகள் இந்த அடைப்புக்கு முழு ஆதரவை அளித்தன. தமிழகத்தில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
காங்கிரஸ் ஆளும் கேரளம், கர்நாடகம், உள்ளிட்ட மாநிலங்கள் உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் கூட பந்த்துக்கு பொதுமக்களின் ஆதரவு இருந்தது. எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தால் பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கூட பந்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக திமுக ஆதரித்த பந்த் பிசு பிசுத்துப் போனது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், அதே நேரம் பின்னலாடை நிறுவனங்கள் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்கள் தாங்களாகவே பந்துக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சாலைகளை மூடினர். ஆனால், பேருந்துகள், ரயில், ஆட்டோக்கள் என அனைத்தும் வழக்கமாக ஓடின. பள்ளிகள், கல்லூரிகள் வழக்கமாக இயங்கின.கடைகளும், வணிக நிறுவனங்களும் வழக்கம் போல இயங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்படவில்லை.
தலை நகர் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கடைகளை அடைக்கச் சொல்லி வணிகர்களை நிர்பந்தித்த போதும் யாரும் கடைகளை அடைக்கவில்லை.புதுச்சேரியை ஒட்டிய காரைக்கால் பகுதி மற்றும் கன்னியாகுமரியில் ஒரு சில பேருந்துகள் மீது மட்டும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பந்துக்கு ஆதரவளித்து மறியலில் ஈடுபட்ட 15,000 பேர் கைதாகி மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இந்த விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கிறது. ஆனால் அந்த பாதிப்பை மக்கள் உணரவில்லை. அந்த உணர்வை ஊட்ட வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. அந்த கடமையில் இருந்து எதிர்க்கட்சிகள் வழுவி விட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

எழுவர் விடுதலை – கவர்னருக்கு எந்த வேலையும் கிடையாது :கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

எழுவர் விடுதலை :ஆளுநர் நிரகரிப்பார் -சு.சாமி!

எழுவர் விடுதலை :”அரசியல் செய்ய வேண்டாம்” -அற்புதம்மாள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*