எதிர்க்கட்சிக்கு எதிராக ஆளும் கட்சி போராட்டம்-புகைப்படம் கொஞ்சம் பழையது!

சாதிக்கு எதிரான வீரமங்கை ஆனார் அம்ருதா !

கருக்கலைப்பு ஒரு பெண் மரணம்-ஒரு பெண் கைது-குற்றாவாளிகள் யார்?

பாஜக வெல்ல வேண்டும்: பழனிசாமிக்கு உத்தரவிட்ட மோடியின் தம்பி!

பாஜக ஆதரவோடு மைனாரிட்டி அரசாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக எதிர்க்கட்சியான திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் வருகிற 25-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவிப்பதுதான் வாடிக்கை. சமீபத்தில் ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுக மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பட்டத்தை நடத்தியது. திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதால் இது முக்கியத்துவம் உள்ள ஒன்றாக பார்க்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கு பெற்றார். அந்த போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றது அதிமுக அரசை மட்டுமல்லாது அவர்களை தாங்கிப் பிடிக்கும் பாஜகவுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில்தான் திமுகவுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது அதிமுக.
இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் பின்னர்தான் திமுகவுக்கு எதிராக போராட்ட அறிவிப்பு வெளியானது. இந்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக முதல்வர் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்:-
“ விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்திற்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு உதவிகளை செய்தன என முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே வாக்குமூலம் ஆக தந்துள்ளார்.இந்த அடிப்படையில், இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரசை தண்டிக்க வேண்டும். இன படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை போர் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும்.இதனை வலியுறுத்தி தி.மு.க.வுக்கு எதிராக வருகிற 25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம் நடத்தப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜபக்‌ஷேவின் பேட்டியை சமீபத்தில் தந்தி டிவி ஒளிபரப்பியது. திமுக, காங்கிரஸ் கூட்டணியை குறிவைத்து ஒளிபரப்பப்பட்ட இந்த நேர்காணலை அடிப்படையாக வைத்து பாஜக கொடுத்த யோசனையில்தான் அதிமுக அரசு இந்த போராட்டத்தை நடத்துகிறது. உலகில் முதன் முறையாக எதிர்க்கட்சி ஒன்றுக்கு எதிராக ஆளும் கட்சி போராட்டம் அறிவித்திருப்பது அதிமுகவிலேயே ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

#ADMK #DMK #EdappadiPalaniswamy #ஒபிஎஸ்_இபிஎஸ்_மோடி #OPS_EPS_MODI

பாஜகவிடமிருந்து விலகுகிறதா ஆர்.எஸ்.எஸ்?

”பழகியது உண்மைதான் ஆனால் காந்தி லலித் குமார் ஒரு சைக்கோ” – நிலானி!

உதைக்கப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு ஸ்வீட் கொடுத்த தமிழிசை -Video

புயல் வரலாம் -தாங்குமா தமிழகம்? -அருள் ரத்தினம்!

நிலானிக்கு காதலை மறுக்கும் உரிமை இல்லையா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*