எழுவரையும் ஆளுநர் விடுவிக்க வேண்டும்-ஸ்டாலின் கோரிக்கை!

குட்கா ஊழல் : காவல்துறை-பரஸ்பர குற்றச்சாட்டுகள்!

எழுவர் விடுதலை அமைச்சரவை முடிவு!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 7 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் முடிவை மாநில அரசு எடுத்து ஆளுநரிடம் முறையிடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையொட்டி இன்று தமிழக அமைச்சரவை கூடி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சரவை முடிவெடுத்து அந்த பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின் அமைச்சரவை தீர்மானத்தின் பின்னர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் : திரு ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்”எனக் கோரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*