எழுவர் விடுதலை:காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு!

வைக்கம் விஜயலட்சுமிக்கு டும்…டும்..டும்!

The Nun விமர்சனம் – பிரபு தர்மராஜ்

எழுவர் விடுதலை – கவர்னருக்கு எந்த வேலையும் கிடையாது :கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

எழுவர் விடுதலை :ஆளுநர் நிரகரிப்பார் -சு.சாமி!

எழுவர் விடுதலை :”அரசியல் செய்ய வேண்டாம்” -அற்புதம்மாள்!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன் , பேரறிவாளன், உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கின் கைதிகள் 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. மாநில அரசின் இந்த பரிந்துரையை ஏற்று ஆளுநர் விடுதலை செய்ய வேண்டியது மட்டும்தான் நடைபெற வேண்டியது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முதன் முதலாக இந்த எழுவர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் கருத்து என்ன என்பது குறித்து பொது வெளியில் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் இந்த விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை மவுனமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்கேவாலா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது,
“ முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய மாநில அரசுகள் இரண்டுமே அரசியல் செய்து வருகிறது. அந்த பயங்கரவாத நிகழ்வில் ராஜீவ்காந்தி மட்டும் கொல்லப்படவில்லை. அப்பாவி மக்களும் போலீசாரும் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு காரணமான அவர்களை உச்சநீதிமன்றம் தண்டித்துள்ளது.இதுவரை அவர்களின் எல்லா கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டே வந்தன. போலி தேசியத்தின் பெயரால் உறுதி மொழி எடுத்துக் கொண்டவர்கள் அவர்கள்.மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசும் பயங்கரவாதிகள் விஷயத்தில் மென்மையான அணுகுமுறையைக் கொண்டுள்ளன. இந்த செயல் மூலம் பயங்கரவாதிகளை பாதுகாக்கிறார்கள். எனவே பிரதமர் மோடிக்கும் அவரது அரசுக்கும் உண்மையின் கண்ணாடியை காண்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.பரந்த இதயம் கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தற்போதைய தலைவர் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் ராஜீவ் கொலையாளிகளுடன் பகையில்லை என்று கூறியிருக்கலாம். ஆனால், ஒரு குடிமகனாகவும், காங்கிரஸ்காரனாகவும் ஒரு எளிமையான கேள்வியை கேட்கிறோம். ஒரு மாநில அரசின் கடமை பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதா அல்லது பாதுகாப்பதா? அவர்களை விடுதலை செய்ய பாஜகவின் ஆளுநருக்கு அவர்களின் கூட்டாளியான அதிமுக பரிந்துரை செய்துள்ளது. இதுதான் இப்போதைய அரசின் கொள்கையா? பயங்கரவாதிகளை தண்டிப்பதில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்பதுதான் எங்கள் தெளிவான நிலைப்பாடு” என்று கடுமையான வார்தைகளோடு எழுவர் விடுதலைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் ரந்தீப் சுர்ஜேவாலா.

#ezuvar_viduthalai #Perarivalan #Arputhammal #பேரறிவாளன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*