எழுவர் விடுதலை அமைச்சரவை முடிவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன்,சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.

தமிழக அரசின் முடிவை ஆளுநர் ஒப்புக்கொள்ள வேண்டும். வேறு வழியில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடியது. துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எழுவரையும் விடுதலை செய்ய அமைச்சரவை முடிவு எடுத்தது. எழுவர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்கிறது அரசு. அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் பேசிய ஜெயக்குமார் “அரசியல் சட்டத்தின் 161-வதுவிதியின் கீழ் எழுவரின் விடுதலையை பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 161-வது பிரிவு மிகத் தெளிவாக உள்ளது. ஆகவே அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்றாக வேண்டும். மாநில அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஆளுநர் பின்னப்ற்ற வேண்டும்”என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*