எழுவர் விடுதலை :”அரசியல் செய்ய வேண்டாம்” -அற்புதம்மாள்!

எழுவரையும் ஆளுநர் விடுவிக்க வேண்டும்-ஸ்டாலின் கோரிக்கை!

குட்கா ஊழல் : காவல்துறை-பரஸ்பர குற்றச்சாட்டுகள்!

எழுவர் விடுதலை அமைச்சரவை முடிவு!

எழுவர் விடுதலை  தொடர்பாக தமிழக அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநருக்கு அந்த பரிந்துரையை அனுப்பியிருக்கும் நிலையில், தமிழர் தலைவரின் வாரிசுகள் நடத்தும் தொலைக்காட்சியில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக விஷமக்கருத்துக்களை தெரிவித்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த விடுதலைக்காக பல வருடங்களாக குரல் கொடுத்து வரும் நிலையில், அந்த தொலைக்காட்சி மட்டும் விடுதலைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து  எழுவர் விடுதலை தொடர்பாக எடுத்த முடிவிற்காக நன்றி தெரிவித்தார்.பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள். “27 ஆண்டுகால வலிகளுக்கும் வேதனைக்கும் முடிவு கிடைத்திருக்கிறது.முழுமையான நிம்மதியான முடிவைக் கொடுத்துள்ளார் முதல்வர். 7 பேர் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி, இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” என்று கோரிக்கை விடுத்துள்ளார் அற்புதம்மாள்.

 

#ezuvar_viduthalai #Perarivalan #Arputhammal #பேரறிவாளன்

 

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*