
எழுவர் விடுதலை :”அரசியல் செய்ய வேண்டாம்” -அற்புதம்மாள்!
எழுவரையும் ஆளுநர் விடுவிக்க வேண்டும்-ஸ்டாலின் கோரிக்கை!
குட்கா ஊழல் : காவல்துறை-பரஸ்பர குற்றச்சாட்டுகள்!
எழுவர் விடுதலை அமைச்சரவை முடிவு!
ராஜீவ்கொலை வழக்கில் கைதாகி 27ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தமிழக அமைச்சரவை எழுவர் விடுதலை தொடர்பான முடிவை ஆளுநருக்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விடுதலையைக் குழப்பும் விதமாக சில தொலைக்காட்சிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், குழப்பவாதியும் பாஜக தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து:-
“இது தமிழக அரசின் பரிந்துரை மட்டும்தான். இதற்கு அதிகாரம் கிடையாது. தமிழக ஆளுநரை இந்த அமைச்சரவை முடிவு நிர்பந்திக்காது. தனது சொந்த கருத்துக்களின் படிதான் ஆளுநர் முடிவெடுப்பார்.ராஜீவ்காந்தி கொலை தொடர்பான ஆவணங்களை படித்து தமிழக அரசின் கோரிக்கையை அவர் நிராகரிப்பார் என நம்புகிறேன்” என்றுள்ளார்.
#எழுவர்விடுதலை #Perarivalan #Arputhammal #7convictsrelease #subramanianSwamy #TNgovernor #RajivGandhiassassinationcase
Be the first to comment