எழுவர் விடுதலை உச்சநீதிமன்றம் என்னதான் சொன்னது?

அக்காவுக்கு கோபம் வருமளவுக்கு அப்படி என்னதான் சொன்னார் சோஃபியா!

இளைஞர்களுக்காக பெண்களைக் கடத்தும் பாஜக எம்.எல்.ஏ?

எழுவர் விடுதலை தமிழக அரசு முடிவெடுக்கலாம்!

நாகர்கோவில் கொலைகார தனியார் பள்ளிகள்!

ஸ்டெர்லைட் பற்றி மார்ச் மாதம் சோஃபியா எழுதிய கட்டுரை!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுவை முடித்து வைத்த உச்சநீதிமன்றம் எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று தீர்ப்பளித்ததாக செய்திகள் வெளியானதோடு, பல அரசியல் கட்சி தலைவர்களும், தமிழணர்வாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் எழுவரையும் தமிழக அரசு உடனே அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிவந்தார்கள். ஆனால், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழக அரசின் பெயரே இல்லை என்று இப்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேற்று உச்சநீதிமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது பேரறிவாளன் வழக்கறிஞர் தலையிட்டு 2015 -ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி பேரறிவாளனை விடுவிக்கக் கோரி ஆளுநரிடம் மனுக்கொடுத்தோம்.அதில் எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் இருக்கிறார் என்று சொல்ல, உச்சநீதிமன்றமோ அரசியல் பிரிவு 161 -ஐ பயன்படுத்தி ஆளுநர் அவர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கலாம் என்று கூறியது. இதில் தமிழக அரசின் பெயரை உச்சநீதிமன்றம் கூறாத நிலையில், இதில் தமிழக அரசு எங்கே வருகிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் ஆளுநர் தமிழக அமைச்சரவையின் அறிவுரைப்படி செயல்படுகிறவர் என்பதால் அவர் இந்த முடிவில் தமிழக அரசை கலந்தாலோசிக்கலாம். அது போல தமிழக அரசும் தன்னிச்சையாக ஏழு பேரையும் விடுவிக்க முடிவெடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும். எது எப்படி என்றாலும் எழுவர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இருந்த தடை நீங்கி விட்டது. அதனால் தமிழக அரசு உடனே எழுவரையும் விடுவிக்க அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*