#ஐகோர்ட்டாவது மயிராவது – எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது தமிழக அரசு?

பெரியார் சிலையை அவமதித்தவருக்கு தர்ம அடி!

எச்.ராஜாவை மீது நடவடிக்கையாவது மயிராவது?

“ஹைக்கோர்ட்டாவது மயிராவது” -போலீசை விளாசிய எச்.ராஜா -Video!

விநாயகர் ஊர்வலம்:சிறுவர்களுக்கு கல்வீச கற்றுக்கொடுக்கும் மத வெறியர்கள்Vido

பாஜாக தேசிய தலைவர் எச்.ராஜா திருமயத்தில் போலிசாருடன் விவாதத்தில் ஈடுபட்ட போது போலீசாரை இழிவாகப் பேசியதோடு, உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஐகோர்ட்டாவது மயிராவது என்றும் பேசினார். இதுவும் வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியது. அரசியல் தலைவர்கள் அவரை கைது செய்யக் கோரி அறிக்கைகள் விடுத்து வரும் நிலையில், இது என் குரலே அல்ல என்று ஒரு பதிலை அளித்து விட்டு எங்கோ ஓடி ஒழிந்து தலைமறைவாக இருக்கிறார் எச்.ராஜா. அவர் மீது எட்டு பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ள திருமயம் போலீசார் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது எனத் தெரியாமல் இருந்து வருகிறார்கள்.
தமிழக அரசும் இது தொடர்பாக மவுனமாக இருந்து வருகிறது. பலவீனமான அரசாக நடவடிக்கை அற்ற இது போன்ற வன்முறை பேச்சுக்களை வேடிக்கை பார்க்கும் அரசாகவும் இது இருப்பதால் எச்.ராஜா போன்றோர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வகுமார், நிர்மல்குமார் ஆகியோர் முன்னிலையில் வழக்கறிஞர்கள் ஆஜராகி எச்.ராஜாவின் பேச்சு தொடர்பாக தாமாக முன் வந்து வழக்குப் பதியுமாறு புகார் தெரிவித்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் “எச்.ராஜா தனது பேச்சு தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் எச்.ராஜா தமிழகத்தின் எந்த நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் பெற முடியாது. கிட்டத்தட்ட எஸ்.வி.சேகருக்கும் இதுதான் நிலை ஆனால் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பளித்தது. இப்போது எச்.ராஜா மீதும் உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் எதுவும் இந்த அரசிடம் இல்லை.
மொத்தத்தில் சில வாரங்கள் ஆறப்போட்டு எச்.ராஜாவை காப்பாற்றுவார்கள். அவர் மீண்டும் இதே போன்ற பேச்சுகளைத் தொடர்வார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*