கண் திருஷ்டியால் அணை உடைந்தது :உளறல் உதயகுமார்!

தமிழகத்தில் வெல்ல மோடியின் முகம் கைகொடுக்குமா?

தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்!Video

‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு

விருதுநகரில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது:-
“ ஏழை மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார்.தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் குடிமராத்துப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. முதல்வர் விவசாயியின் மகன் என்பதால் அவரை அணுகுவது எளிமையாக உள்ளது.தமிழகத்தில் முக்கிய அணைகள் நிரம்பி வழிகிறது. அண்டை மாநிலங்கள் எவ்வளவு தண்ணீர் விட்டாலும் கொடுங்கள் கொடுங்கள் என்று கேட்கும் அளவுக்கு அணைகள் உள்ளன.மேட்டூர், வைகை, பவானி சாகர், பெருஞ்சாணி உள்ளிட்ட அத்தனை அணைகளும் நிரம்பி வழிகின்றன.முதல்வருக்கு தண்ணீர் ராசி. முக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டிதான் காரணம், அந்த அளவுக்கு மக்கள் நலப்பணிகளை பழனிசாமி விரைவு படுத்தி வருகிறார்”என்று பேசினார்.

#TNGovt #TNMinister #Udhayakumar #Mukkombu

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*