கருணாஸுக்கு ஒரு நீதி எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா? -ஸ்டாலின் கண்டனம்!

எச்.ராஜாவை விட்டு விட்டு கருணாஸை கைது செய்த போலீஸ்!

காற்றாலை மின்சார ஊழல் :ஆதாரம் வெளியிட்டார் ஸ்டாலின்!

சட்டீஸ்கரில் காங்கிரஸை கைவிட்டு அஜித் ஜோகியுடன் இணைந்தார் மாயாவதி!

போலீஸ் டவுசரை கழட்டி விடுவேன் :கருணாஸ் சவால்!

தேசபக்தர்களுக்காக அமேசானில் வருகிறது கோமியப் பொருட்கள்!

நீதிமன்றத்தையும், போலீசையும் மிக மோசமாக விமர்சித்த பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவை கைது செய்யாத தமிழக அரசு. போலீசை விமர்சித்து பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை கைது செய்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச் சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக்கூடாது என்பதிலும்; பொது அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெருமளவுக்கு இருக்கிறது என்பதிலும்; இரு வேறு கருத்துகளுக்கு இடமே இல்லை.

ஆனால் அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் திரு கருணாஸ், தான் தெரிவித்த கருத்துக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த பிறகும், அவரை வேண்டுமென்றே கைது செய்திருப்பது, தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி, “ஆளுக்கொரு நீதி – வேளைக்கொரு நியாயம்” என்ற நிலையில்தான் அமல்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், உயர்நீதிமன்றத்தையும், தமிழ்நாடு காவல்துறையையும் ஒட்டுமொத்தமாக மிகவும் கேவலமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்ததாலும், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் இல்லத்தரசிகளைப் பற்றி அநாகரிகமான முறையில் பேசியதாலும், பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், இதுவரை பா.ஜ.க. தேசியச் செயலாளர் திரு எச். ராஜா கைது செய்யப்படவில்லை.

அவர் காவல்துறைக்கே – காவல்துறையைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசுக்கே சவால் விடும் வகையில் “நான் தலைமறைவாகவில்லை” என்று மேடைதோறும் பேசி, அதற்கு காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்பு வழங்கி வருவது என்னவகை நியாயம் என்று புரியவில்லை.

அதேபோல், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்ட திரு எஸ்.வி.சேகரின் முன் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, உச்சநீதிமன்றமே கைது செய்ய தடை விதிக்க மறுத்தும் கூட, அவரை அ.தி.மு.க அரசு கைது செய்யத் தயக்கம் காட்டுவது, என்ன வகை அணுகுமுறை என்றும் விளங்கவில்லை”என்று தன் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

சாதிக்கு எதிரான வீரமங்கை ஆனார் அம்ருதா !

கருக்கலைப்பு ஒரு பெண் மரணம்-ஒரு பெண் கைது-குற்றாவாளிகள் யார்?

பாஜக வெல்ல வேண்டும்: பழனிசாமிக்கு உத்தரவிட்ட மோடியின் தம்பி!

#கருணாஸ்கைது #லொடுக்குபாண்டி #முக்குலத்தோர்புலிப்படை #திமுகதலைவர்_ஸ்டாலின்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*