கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்!

டிங்கரிங், பட்டி பார்த்து டிஜிட்டலில் வருகிறது ‘வசந்த மாளிகை’

தெலங்கானாவில் சந்திரசேகரராவுக்கு எதிராக தெலுங்குதேசம்-காங் கூட்டணி!

“பணம் கொடுப்பது வாங்குவது இரண்டுமே குற்றம்” -இபிஎஸ்!

கருப்பு என்றாலே ஆள்வோருக்கு அச்சம்தான். கருப்பை எதிர்ப்பு வடிவமாக பயன்படுத்தியவர் பெரியார். அவர் வழி வந்த திராவிடர் கழகத்தினர் மட்டுமல்லாது, தமிழகத்தின் பெரும்பாலான இயக்கங்களும் எதிர்ப்பை தெரிவிக்க கருப்பு நிறத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் கருப்பு நிறம் பயன்பட்டு வருகிறது. தமிழகத்தில் கருப்புச் சட்டை போட்டவர்களை எல்லாம் கைது செய்யும் நிகழ்வுகள் கூட நடந்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த பெண்களிடம் இருந்து போலீசார் துப்பட்டாவை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பெடுல் பகுதியில் முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சியில் முல்டாய் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிதரகூட் கிராமோதயா வித்யாலயா கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர். அவர்களின் பலர் கருப்பு நிற துப்பட்டாவை அணிந்து வந்திருந்தனர். இதைக் கவனித்த போலீசார் கருப்பு துப்பட்டாவை எடுத்து முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டி விடுவார்களோ என்ற அச்சத்தில் மாணவிகளிடம் இருந்த துப்பட்டாவை போலீசார் பறிமுதல் செய்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் துப்பட்டாக்களை திருப்பிக் கொடுத்து விடுவதாக வாங்கி துப்பட்டாவை வேறு ஒரு அறையில் வைத்து விட்டனர். காங்கிரஸ் கட்சி இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக இதை மறுத்துள்ளது.

#ShivrajSinghChauhan #BlackScarves #துப்பட்டா_அரசியல் #கருப்பு #எதிர்ப்பின்வடிவம்-கருப்பு

1 Comment

  1. கருப்பு துப்பட்டாவை சில கோழைகள் தவறாக பயன்படுத்திய நிகழ்வுகள் உண்டு. ஆகவே போலிசாரின் செயல் நியாயமானதே

Leave a Reply

Your email address will not be published.


*