குட்கா ஊழல் : காவல்துறை-பரஸ்பர குற்றச்சாட்டுகள்!

குட்கா ஊழல் விஸ்வரூவம் எடுத்துள்ள நிலையில், காவல்துறை உயரதிகாரிகள் இது தொடர்பாக பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள்.இதனால் தமிழக காவல்துறைக்குள் மோதல் நிலவுகிறதோ என்ற எண்ணம் பொது மக்களிடம் உருவாகி உள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய 40 கோடி லஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயபாஸ்கர். டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்ட் நடந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜார்ஜ் “துணை கமிஷனராக ஜெயக்குமார் இருந்த போதுதான் குட்கா விற்பனை நடந்தது, நிச்சயமான குட்கா ஊழல் நடந்துள்ளது. ஆனால், நான் அதில் சம்பந்தப்படவில்லை. ஜெயக்குமார் இது பற்றி எனக்கு தகவல் தரவில்லை. குட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் யார் என்பதை சிபிஐதான் கண்டு பிடிக்க வேண்டும்” என்று குற்றம் சுமத்தினார்.
அப்போது சென்னை துணை கமிஷனராக இருந்த ஜெயக்குமார் இப்போது விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-ஆக பணி செய்கிறார். அவர் ஜார்ஜுக்கு பதிகளிக்கும் வகையில் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார் அதில்,
“குட்கா ஊழல் தொடர்பாக நான் தற்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், என் நேர்மையை சென்னை மக்கள் நன்றாக அறிவார்கள்.இந்த குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் பதில் சொல்வது என் கடமையாகிறது. முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து பிற அதிகாரிகள் மீது பழி போடக்கூடாது.ஆனால் பழி வாங்கும் நோக்கோடு என் மீது அவதூறு பரப்பி வருகிறார்” என்றார்.
முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்ஜின் சொற்களுக்கு விழுப்புரம் எஸ்.பி பதிலளித்துப் பேசியிருப்பதன் மூலம் காவல்துறைக்குள் நிலவும் கோஷடி மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
#GutkhaScam #George #vizuppuram_Sp_Jayakumar #குட்கா_ஊழல்

முன்னாள் முதல்வர் தொகுதியை குறி வைக்கும் தினகரன்!

எழுவர் விடுதலை உச்சநீதிமன்றம் என்னதான் சொன்னது?

அக்காவுக்கு கோபம் வருமளவுக்கு அப்படி என்னதான் சொன்னார் சோஃபியா!

இளைஞர்களுக்காக பெண்களைக் கடத்தும் பாஜக எம்.எல்.ஏ?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*