’குட்கா’ நாயகன் விஜயபாஸ்கருக்கு பதவி உயர்வு!

தப்ப விட்டது சிபிஐ-உத்தரவிட்டது மோடி!

எழுவர் விடுதலை : ஜனாதிபதி பெயரில் போலி அறிவிப்பு வெளியிட்ட உள்துறை அமைச்சகம்!

குட்கா ஊழல் வழக்கில் ரெய்ட் வளையத்தினுள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுக கட்சிக்குள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தின் பின்னர் ரெய்டு மேல் ரெய்டுக்கு ஆளானவர் விஜயபாஸ்கர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க இவர் வைத்திருந்த பணமும் பிடிபட்ட நிலையில், குட்கா விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்டு அதிலும் ரெய்டுக்கு உள்ளானார். அவர் மட்டுமல்லாமல் அவரது தந்தையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், குற்றம் சாட்டப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகி விட மாட்டார் என்று அதிமுகவினர் பேசி வரும் நிலையில்,அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர் என்ற உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலுக்கு முன்னர் கட்சியை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரவிரும்பும் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் மாவட்ட வாரியாக பதவிகளை பகிர்ந்தளித்து வருகிறார்கள்.

#Gutkha_scam #Gutkha_Vijayabasker #Minister_Vijayabasker

திமுகவை குறிவைக்கும் ஊடகங்கள்?

மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார் அற்புதம்மாள்!

”20 நிமிடங்கள் வரை மல்லையா அருண்ஜெட்லியுடன் பேசினார்”- காங் குற்றச்சாட்டு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*