கேரளத்தில் மழைக்குப் பிந்தைய வறட்சிக்கு வாய்ப்பு!

எங்களுக்கு பயமெல்லாம் கறை மீது அல்ல :பொன்.விமலா!

கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்!

டிங்கரிங், பட்டி பார்த்து டிஜிட்டலில் வருகிறது ‘வசந்த மாளிகை’

தெலங்கானாவில் சந்திரசேகரராவுக்கு எதிராக தெலுங்குதேசம்-காங் கூட்டணி!

“பணம் கொடுப்பது வாங்குவது இரண்டுமே குற்றம்” -இபிஎஸ்!

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் மழைக்குப் பிந்தைய வறட்சிக்கு வாய்ப்பு உருவாகி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலுக்கு ஆய்வு செய்யுமாறு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து கேரளம் மீண்டும் வரும் சூழலில் ஆறு குழங்களில் தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது. மண்ணின் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெரியார், பாரதபுழா, பம்பை, கபானி போன்ற நதிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் கேரள மண் வளத்தை அழித்து விட்டதாக கூறப்படுகிறது. இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்த போது அதிக அளவு நிலச்சரிவு ஏற்பட்டட் நிலையில், பல மாவட்டங்களில் வறட்சியின் அறிகுறிகள் தென்படுவதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். பெரும்பலான கிணறுகள் மணல் மூடி உள்ள நிலையில் வறட்சி பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய மத்திய நீர் வள மேலாண்மை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்லுயிர்சூழலை மீண்டும் வளர்த்தெடுக்கவும், மண் வளத்தை மீண்டும் பெருக்கவும் கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

#Kerala_Floods #கேரள_மழைவெள்ள_பாதிப்பு #கேரளம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*