சட்டீஸ்கரில் காங்கிரஸை கைவிட்டு அஜித் ஜோகியுடன் இணைந்தார் மாயாவதி!

போலீஸ் டவுசரை கழட்டி விடுவேன் :கருணாஸ் சவால்!

தேசபக்தர்களுக்காக அமேசானில் வருகிறது கோமியப் பொருட்கள்!

சாதிக்கு எதிரான வீரமங்கை ஆனார் அம்ருதா !

பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு தேசிய அளவில் இருந்தது. அதிக பங்கீடு கொடுக்கும் கட்சிகளுடன் கூட்டு என்பதை வெளிப்படையாக அறிவித்த மாயாவது சட்டீஸ்கர் மாநில தேர்தலில் கவனம் செலுத்தினார். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சட்டீஸ்கர் தேர்தலை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி துவங்கிய அஜித் ஜோகியுடன் மாயாவது கூட்டணி அமைத்துள்ளார்.
பாஜக ஆளும் கட்சியாக உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கோஷம் முன்னரே ஒலித்த நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் இணையாமல் அதிக தொகுதிகளைக் கொடுத்த அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார் மாயாவதி.இந்த கட்சிகளுக்குள் கூட்டணி உருவாகியிருப்பதால் சட்டீஸ்கரில் இந்த கூட்டணி மீது அனைவரின் பார்வையும் விழுந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி 35 தொகுதிகளிலும், ஜனதா காங்கிரஸ் 55 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில் கூட்டணி வென்றால் அஜித் ஜோகிதான் முதல்வர் என மாயாவதி அறிவித்துள்ளார்.இந்த கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. பழங்குடிகள், தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை இக்கூட்டணி கணிசமாக பிரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது போல ஒரு பக்கம் இந்த கூட்டணி, இன்னொரு பக்கம் காங்கிரஸ் என தனித்தனியாக போட்டியிட்டால் பாஜக எளிதில் வெல்லும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

#mayavathi_ajithjohi #மாயாவதி_அஜித்ஜோகி

கருக்கலைப்பு ஒரு பெண் மரணம்-ஒரு பெண் கைது-குற்றாவாளிகள் யார்?

பாஜக வெல்ல வேண்டும்: பழனிசாமிக்கு உத்தரவிட்ட மோடியின் தம்பி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*