சபரிமலையில் பெண்களை அனுமதிக்காது தேவசம் போர்ட் ஏன்?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்பது அதிமுக கிளப்பி விட்ட வதந்தி!

18-ஆம் தேதி முதல் சபரிமலையில் பெண்கள் அனுமதி!

2,000 பேருக்கு ஆண்மை நீக்க தண்டனை : ஜெயலலிதா இருந்திருந்தால்?

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் பெண்களையும் அய்யப்பன் கோவிலில் அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு இந்து மதத்தைச் சேர்ந்த சில ஆன்மீகப்பெரியவர்களும், மடாதிபதிகளும், குறிப்பிட்ட ஒரு சாதியினரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து மராட்டிய மாநிலத்தில் சிவசேனா பந்த் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளதோடு தேவசம்போர்ட் நிர்வாகத்தோடு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
வருகிற அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட இருக்கும் நிலையில் அதில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக தேவசம்போர்ட் முடிவெடுக்கும். ஆனால் கேரள நம்பூதிரிகளும், தாத்ரிகளும் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் பாதுகாப்பு, கழிப்பிட வசதி,போதுமான இட வசதியின்மை போன்ற காரணங்களைக் காட்டி இந்த வருடம் பெண்களுக்கு தடை போட்டு விட்டு அதையே காரணமாகக் கூறி நீதிமன்றத்தில் தடை பெறவும் சிலர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கேரள தேவசம்போர்ட் தலைவர் பத்மகுமார் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது:-
“உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் செய்வது தொடர்பாக நாங்கள் ஆலோசனை செய்வோம். தேவசம் போர்ட் அது தொடர்பாக முடிவெடுக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தினால் 40% பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் 100 ஏக்கர் இடவசதி கூடுதலாக தேவைப்படும்” என்றார்.

பாஜகவுக்கு எதிரான டெல்லி பேரணி திமுகவும் களமிரங்கியது!

உ.பி காட்டுமிராண்டித்தனம் :ஆப்பிள் நிறுவன அதிகாரி சுட்டுக்கொலை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*