சபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலம் தழுவிய பந்த்!

திருமுருகன் உயிருக்கு ஆபத்து?

‘பரியேறும் பெருமாள் ‘ குறைவான காட்சிகள்தான்-மக்களிடம் பெருகும் ஆதரவு!

பரியேறும் பெருமாள்’ கூட்டு மனசாட்சி மீது வீசப்பட்ட முதல் கல்!

தனிமைச்சிறையில் திருமுருகன் :பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்!

மெகுல் சோக்‌ஷி இந்தியா கொண்டு வரப்படுவாரா?

சபரிமலையில் பெண்கள் அனுமதி அளித்தது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து மராட்டிய மாநிலத்தில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் 11 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதியில்லை. பெண்கள் மாதவிடாய் காலங்களில் அய்யப்பன் கோவிலுக்குச் சென்றால் அது சாமிக்குற்றம் ஆகி விடும் என்ற மூட நம்பிக்கை காரணமாக பெண்களை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அக்கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. பெண்களுக்கும் வழிபாடு நடத்தும் உரிமை வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், டி.ஓய். சந்திரசூட், ஏம்.எம்.கன்வீல்கர் , நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, ஆகிய ஐவர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் அனைத்து வயது பெண்களும் அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கியதோடு, வழிபாட்டு விஷயங்களில் பாலின பாகுபாடு காட்டுவது சட்ட விரோதம் என்றும் தீர்ப்பளித்தனர். இதில் பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் வழிபாட்டு விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து ஆன்மீகவாதிகள், மதவாதிகள், பாஜகவைச் சேர்ந்தவர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி மராட்டிய மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலம் தழுவிய பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது சிவசேனா.
நீதிமன்றங்களும் அதன் நடவடிக்கைகளும் இந்து தேசியத்தின் பெயரால் கட்சிகளும் சில அமைப்புகளும் எப்படி எதிர்கொள்கிறது என்பதை இது காட்டுகிறது.

#saparimala #sabarimalai_women #சபரிமலையில்பெண்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*