சோஃபியாவுக்கு சம்மன்:கைது செய்யத் திட்டம்?

கம்யூனிஸ்ட் வேட்பாளராக களமிரங்குகிறார் கன்ஹையா குமார்!

ஸ்டெர்லைட் பற்றி மார்ச் மாதம் சோஃபியா எழுதிய கட்டுரை!

தோழர் ஓவியா தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்!

ஒரிஜினல் பாஸ்போட்டுடன் ஆஜராக வேண்டும் என சோஃபியாவுக்கு புதுக்கோட்டை காவல் நிலையம் சம்மன் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் விவாதத்தில் ஈடுபட்டதாகவும், கோஷம் எழுப்பியதாகவும் கூறி கைது செய்யப்பட்ட லூயி சோஃபியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பொது வெளியில் கிடைத்த ஆதரவும், சமூக வலைத்தளங்களில் எழுந்த ஆதரவும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை உருவாக்கிக் கொடுத்த நிலையில், அவர் மீதான வழக்கை தமிழிசை வாபஸ் பெற மறுத்து விட்டார்.

சோஃபியாவின் பாஸ்போர்ட்டை முடக்கி அவரை சில நாட்களாகவது சிறையில் வைக்க வேண்டும் என்கிற அழுத்தம் கொடுப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு புதுக்கோட்டை போலீசார் ஓரிஜினல் பாஸ்போட்டுடன் வருகிற 8-ஆம் தேதி ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.

சோஃபியாவை கனடா செல்லவிடாமல் தடுப்பதோடு, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் சாத்தியங்கள் தொடர்பாக போலீசார்  அவரை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

#Tamilisai_Soundararajan #DrTamilisaiBJP #தமிழிசை_சௌந்தரராஜன் #தமிழக_பாஜக #மோடி_அரசின்_வீழ்ச்சி#yougogirlsofia#isupportsofia #JusticeForSofia #பாசிசபாஜக_ஆட்சிஒழிக

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*